ரங்கன் வாத்தியார் - கபிலனாக மாறிய தோனி, ஜடேஜா.. CSK அணி பகிர்ந்த மாஸான வீடியோ.. ஜடேஜா போட்ட தெறி கமெண்ட்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

அடுத்த ஆண்டுக்கான ஐபிஎல் ஏலத்தில் ஜடேஜாவை தக்கவைத்திருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இந்நிலையில் அந்த அணி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோ ரசிகர்ளை கொண்டாட செய்திருக்கிறது.

Advertising
>
Advertising

Also Read | திருமணத்தை மீறிய உறவு.. பக்கத்து வீட்டுக்காரருடன் சேர்ந்து மனைவி போட்ட பயங்கர பிளான்.. 4 வருஷத்துக்கு பின் கண்டுபிடிக்கப்பட்ட கணவரின் சடலம்..!

2023 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடருக்கான பணிகளும் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதே போல, டிசம்பர் மாதம் 23 ஆம் தேதியன்று கேரளாவில் வைத்து ஐபிஎல் ஏலம் நடைபெற உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருந்தது. இதனைத் தொடர்ந்து, ஐபிஎல் ஏலத்திற்கு முன்பாக ஒவ்வொரு அணிகளும் எந்தெந்த வீரர்களை தக்க வைத்துக் கொள்ள போகிறார்கள் என்பது குறித்தும், எந்தெந்த வீரர்களை விடுவித்துள்ளார்கள் என்பது குறித்தும் பட்டியலை அதிகாரபூர்வமாக வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தக்க வைக்கப்பட்டுள்ள வீரர்கள் மற்றும் விடுவித்த வீரர்கள் குறித்த பட்டியலையும் வெளியிட்டுள்ளது. பிராவோ, ராபின் உத்தப்பா (ஏற்கனவே ஓய்வை அறிவித்து விட்டார்), ஆடம் மில்னே, ஹரி நிஷாந்த், க்றிஸ் ஜோர்டன், பகத் வர்மா, KM ஆசிப், நாராயண் ஜெகதீசன் ஆகிய 8 வீரர்களை சிஎஸ்கே விடுவித்துள்ளது.

அதே போல, ஜடேஜா தொடர்ந்து சிஎஸ்கே அணியில் நீடிப்பாரா என இணையத்தில் பலரும் பேசிவந்தனர். இந்நிலையில், தற்போது சிஎஸ்கே அணி ஜடேஜாவை அணியில் தக்க வைத்துக் கொண்டது. இது தவிர, தோனி, டெவான்  கான்வே, ருத்துராஜ் கெய்க்வாட், ராயுடு, மொயீன் அலி, தீபக் சாஹர் உள்ளிட்ட பல வீரர்களை மீண்டும் தக்க வைத்துக் கொண்டது. சிஎஸ்கேவை தவிர அனைத்து அணிகளும் இது போல தக்க வைத்துக் கொண்ட வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதனை முன்னிட்டு CSK அணி தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்திருக்கிறது. அதில், சர்ப்பட்டா பரம்பரையில் கபிலன் (ஆர்யா) பேசும் "போய் சொல்லுண்ணா நான் யாருன்னு எல்லோருக்கும் நிரூபிக்குற நேரம் இது.. நான் ஆடுறேன்-ணா" என்ற வசனங்களின் பின்னணியில் ஜடேஜா மற்றும் தல தோனி தோன்றுகிறார்கள். இந்த பதிவில், "அன்புடென் வெயிட்டிங் ஜட்டு (Anbuden Wai8️⃣ing Jaddu)" எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த வீடியோவில் "I am Coming" என ஜடேஜா கமெண்ட் செய்ய, இந்நிலையில் இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. முன்னதாக ஜடேஜாவை CSK தக்க வைப்பதாக அறிவிப்பு வெளியானதும் தோனியை வணங்கி நிற்பது போன்ற தனது புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்த ரவீந்திர ஜடேஜா, "எல்லாம் நன்றாக இருக்கிறது 💛" என குறிப்பிட்டு #RESTART என்ற ஹேஷ்டேக்கையும் இணைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Also Read | "MI லெஜெண்ட்".. ஓய்வை அறிவித்த பொல்லார்டு.. ரோஹித் ஷர்மாவின் உருக்கமான போஸ்ட்.. கண்கலங்கிய ரசிகர்கள்..!

CRICKET, MS DHONI, CSK, CSK TEAM, JADEJA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்