VIDEO: ‘பாசமா கட்டிப்புடிச்சாருன்னு பாத்தா, இப்படி ட்விஸ்ட் பண்ணிட்டாரே’!.. வசமாக சிக்கிய ‘சின்ன தல’.. அடக்கமுடியாமல் சிரித்த வீரர்கள்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் பிளமிங்-க்கு பிறந்தநாள் கொண்டாடிய வீடியோவை சிஎஸ்கே தங்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

14-வது சீசன் ஐபிஎல் தொடர் ஏப்ரல் 9-ம் தேதி தொடங்க உள்ளது. இதன் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில், நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன.

இதற்கு அடுத்த நாள் (ஏப்ரல் 10-ம் தேதி) மும்பை வான்கடே மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கும் இடையேயான போட்டி நடைபெறுகிறது. இதனால் மும்பை சென்றுள்ள சிஎஸ்கே வீரர்கள், அங்கு தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த ஐபிஎல் தொடரில், ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் சென்னை அணி வெளியேறியது. அதனால் இந்த ஆண்டு ஐபிஎல் கோப்பையை வெல்ல சிஎஸ்கே முனைப்பு காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பிளமிங் தனது பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது அவரது முகத்தில் வீரர்கள் கேக்கை தடவினர்.

அந்த சமயம் அருகில் இருந்த ரெய்னாவை பாசமாக கட்டிப்பிடிப்பது போல் அவரின் முகத்தில், பிளமிங் கேக்கை தடவினார். இந்த வீடியோவை சிஎஸ்கே தங்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்