"அப்பாடா,,.. ஒரு வழியா அத 'Cross' பண்ணிட்டோம் யா 'சாமி',,.." ஓரளவு நிம்மதியில் 'சிஎஸ்கே' ரசிகர்கள்,.. 'காரணம்' என்ன??..

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் விக்கெட்டுகளை இழந்து தவித்து வருகிறது.

இன்றுடன் சேர்த்து அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றால் தான் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வாய்ப்புண்டு என்ற நிலையில், சென்னை அணி மிக மோசமாக ஆடி வருகிறது. 3 ரன்களுக்கே சென்னை அணி 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இதனால் சென்னை அணி, ஐபிஎல் தொடரில் குறைந்த பட்ச ரன்னான 49 ரன்கள் கூட அடிக்காமல் அவுட் ஆகி விடுமோ என சென்னை அணி ரசிகர்கள் கலக்கத்தில் இருந்தனர். ஆனால், சென்னை அணியின் சாம் குர்ரான் உதவியுடன் 49 ரன்களை கடந்தது. இதன் காரணமாக, சென்னை ரசிகர்கள் ஓரளவு நிம்மதி அடைந்துள்ளனர். 

 

ஏற்கனவே இந்த சீசனில் சென்னை அணியின் பார்ம் அதிகம் விமர்சனம் செய்யப்பட்டு வரும் நிலையில், குறைந்த பட்ச ஸ்கோர் என்ற மோசமான சாதனையும் சென்னை வசம் ஆகி விடுமோ என்ற ரசிகர்களின் பயம் தற்போது விலகியுள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 49 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியிருந்தது தான் ஐபிஎல் தொடரில் குறைந்தபட்ச ஸ்கோராக உள்ளது குறிப்பிடத்தக்கது. 















 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்