கையில் கிட்டாருடன் Fun மோடில் தல தோனி.. CSK அணி பகிர்ந்த Cool வீடியோ..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் போட்டிகள் துவங்க இருக்கும் நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி அணி வீரர்களுடன் கிட்டார் வாசிப்பது போன்ற வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

Images are subject to © copyright to their respective owners.
ஐபிஎல் 2023
கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது ஐபிஎல் தொடர். கடந்த வருடத்திலிருந்து பத்து அணிகள் இந்த தொடரில் பங்கேற்று வருகின்றன. அதன்படி சில தினங்களுக்கு முன்னர் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் அட்டவணை வெளியிடப்பட்டது. மார்ச் 31ஆம் தேதி துவங்கி டிசம்பர் 28ஆம் தேதி வரை இந்தியாவில் இந்த வருடத்திற்கான ஐபிஎல் போட்டிகள் நடைபெற இருக்கின்றன. இந்தத் தொடரின் முதல் போட்டியில் சென்னை அணியை எதிர்த்து குஜராத் அணி விளையாட இருக்கிறது.
Images are subject to © copyright to their respective owners.
இந்நிலையில் பயிற்சியில் பங்கேற்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள் சென்னைக்கு வந்த வண்ணம் உள்ளனர். அந்த வகையில் தோனி இன்று சென்னை வந்திருக்கிறார். பல வருடங்களுக்கு பிறகு சென்னையில் ஐபிஎல் தொடர் நடைபெற இருப்பதால் சிஎஸ்கே ரசிகர்களுக்கு மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
MS தோனி
கடந்த 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் முதன் முதலில் ஆரம்பிக்கப்பட்ட போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக மகேந்திர சிங் தோனி தேர்வு செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து தற்போது வரை சிஎஸ்கே அணியின் கேப்டனாக தோனி தொடர்கிறார். மற்ற அணிகளுக்கு கேப்டன்கள் ஒருபுறம் மாறிக்கொண்டே இருக்கையில் தோனி இத்தனை ஆண்டுகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்தி வருகிறார். ஐபிஎல் தொடரை பொறுத்தவரையில் தோனி இதுவரையில் 234 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் 4978 ரன்களை அவர் குவித்திருக்கிறார். இதில் 24 அரை சதங்களும் அடங்கும்.
மேட்ச் பரபரப்பான சூழ்நிலையில் இருக்கும்போதும், பொறுமையுடன் அணியை வெற்றியின் பக்கம் அழைத்துச் செல்வதில் தோனி ஒரு வித்தைக்காரர். இதன் காரணமாகவே ரசிகர்கள் தோனியை கூல் கேப்டன் என்றும் மிஸ்டர் கூல் என்றும் அழைக்கின்றனர்.
Images are subject to © copyright to their respective owners.
வீடியோ
இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றினை பகிர்ந்துள்ளது. அதில் கையில் கிட்டாருடன் தோனி நிற்க, சக அணி வீரர்களான ஷிவம் தூபே, தீபக் சஹார், ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோரும் அந்த வீடியோவில் இடம்பெற்றிருக்கின்றனர். இந்த வீடியோ தற்போது ரசிகர்களுக்கு மத்தியில் வைரலாகி வருகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "ஒவ்வொரு IPL பிளேயருக்கும் CSK-ல இருக்கணும்ங்கறது கனவு".. ரஹானே உருக்கம்.. வீடியோ,!
- அந்த சிம்ப்ளிசிட்டி தான்.. பிரபல ரஜினி பாடல் பின்னணியில் ஒலிக்க என்ட்ரி கொடுத்த தோனி.. CSK அணி பகிர்ந்த வீடியோ..!
- "அவரு ஃபோட்டோ இருந்தே ஆகணும்".. கல்யாண பத்திரிக்கையில் தோனி.. இணையத்தை கலக்கும் ஃபோட்டோ!!
- வாத்தி.. இளம் வீரர்களுக்கு பேட்டிங் டிப்ஸ் கொடுத்த தோனி.. வைரலாகும் வீடியோ..!
- வெறித்தனமான பிராக்டீஸ் மோடில் தல தோனி.. அடிச்சா சிக்ஸ் தான்.. Fire-ஆன வீடியோ..!
- "தல தோனி கேப்டன்சி.. ".. CSK வீரர் அஜிங்கியா ரஹானே உருக்கம்.. நெகிழ்ந்துபோன ரசிகர்கள்..!
- போனில் அழைத்து வர்ணனை செய்வதை பாராட்டிய MS தோனி.. மனம் நெகிழ்ந்து போன தினேஷ் கார்த்திக்!!
- களைகட்ட இருக்கும் ஐபிஎல்.. சென்னை வந்தார் CSK கேப்டன் MS தோனி.. வீடியோ.!
- "ஐபிஎல் தொடரில் ஆடுவேன்".. பென் ஸ்டோக்ஸ் சொன்ன முக்கிய தகவல்.. கூடவே கோச் கொடுத்த அப்டேட்!
- "ஒரு மாசம் அதை நெனச்சு அழுதேன்".. சிக்கித் தவித்த இஷாந்த்.. தோனி, தவான் செய்த விஷயம்.. நெகிழ்ச்சி பின்னணி!!