‘CSK-வ பத்தி பேசுறது முன்னாடி KKR-ஐ பத்தி ஒன்னு சொல்றேன்..!’ தோனி சொன்ன அந்த வார்த்தை.. கொல்கத்தா ரசிகர்களே இதை கொண்டாடுவாங்க..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்றபின் கொல்கத்தா அணியை தோனி புகழ்ந்து பேசியது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.

ஐபிஎல் (IPL) தொடரின் இறுதிப்போட்டி நேற்று துபாய் மைதானத்தில் நடைபெற்றது. இதில் தோனி (Dhoni) தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியும், இயான் மோர்கன் (Eoin Morgan) தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் (KKR) அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி, 20 ஓவர்களில் 192 ரன்களை குவித்தது. இதில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் டு பிளசிஸ் 86 ரன்கள் அடித்து அசத்தினார்.

இதனை அடுத்து பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 27 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே வெற்றி பெற்று ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது.

இந்த நிலையில் போட்டி முடிந்த பின் வெற்றி குறித்து சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ‘சிஎஸ்கே அணியை பற்றி பேசுவதற்கு முன், கொல்கத்தா அணி குறித்து முதலில் பேசுவதுதான் முக்கியம். ஐபிஎல் தொடரின் முதல் பாதியில் அந்த அணி மோசமான நிலையில் இருந்தது. ஆனால் தற்போது சிறப்பாக விளையாடி இதுவரை வந்துள்ளனர். இது மிகவும் கடினமாக காரியம். இந்த ஐபிஎல் தொடரில் எந்த அணி கோப்பையை வெல்ல தகுதி உடையது என்று கேட்டால், நிச்சயம் அது கொல்கத்தா என்றுதான் சொல்வேன்’ என தோனி புகழ்ந்து பேசினார்.

இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் முதல் பாதியில் கொல்கத்தா அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அப்போது விளையாடிய 7 போட்டிகளில் 2-ல் மட்டுமே அந்த அணி வெற்றி பெற்றிருந்தது. ஆனால் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த இரண்டாம் பாதி ஐபிஎல் தொடரில் அப்படியே தலைகீழான ஆட்டத்தை கொல்கத்தா அணி வெளிப்படுத்தியது.

கொல்கத்தா அணியில் உள்ள இளம் வீரர்கள் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக வெங்கடேஷ் ஐயர், சுப்மன் கில், ராகுல் திரிபாதி, சிவம் மாவி போன்ற வீரர்கள் சிறப்பாக விளையாடினர். அதிலும் வெங்கடேஷ் ஐயர், கொல்கத்தா அணி பல போட்டிகளில் வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்