தீபக் சாஹரை தொடர்ந்து விலகிய மற்றொரு வீரர்.. 'குட்டி' மலிங்காவை தட்டித் தூக்கிய 'CSK'.. யாருப்பா இந்த பையன்??

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை ஆறு போட்டிகளில் ஆடியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி கண்டுள்ளது.

Advertising
>
Advertising

Also Read | “எல்லாரும் சீக்கிரம் வெளிய போங்க”.. 10 நிமிஷம் அமெரிக்காவை அதிர வைத்த விமானம்.. கடைசியில் தெரியவந்த உண்மை..!

மீதமுள்ள அனைத்து லீக் போட்டிகளிலும் தொடர்ந்து வெற்றி பெற்றால் தான் பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பை சென்னை அணியால் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்றும் கருதப்படுகிறது.

பேட்டிங்கில் சில வீரர்கள் தொடர்ந்து நன்றாக ஆடி, சிஎஸ்கே அணிக்காக ரன் சேர்த்து வந்தாலும், பந்து வீச்சு கை கொடுக்காமல் போவது தான், சென்னை அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

ஐபிஎல் தொடரின் பெரிய தலைகள்

இதனிடையே, தங்களின் 7 ஆவது லீக் போட்டியில், இன்று (21.04.2022) மும்பை இந்தியன்ஸ் அணியை சந்திக்கவுள்ளது சிஎஸ்கே. மும்பை அணி இதுவரை ஆடியுள்ள ஆறு போட்டிகளிலும் தோல்வி அடைந்து, நடப்பு சீசனில் வெற்றிக் கணக்கை தொடங்காமல் உள்ளது. சென்னை மற்றும் மும்பை அணிகள் தொடர் தோல்விகளால் துவண்டு போனாலும், பலம் வாய்ந்த அணிகள் மோதுவதால் நிச்சயம் போட்டி முழுக்க முழுக்க விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிதாக இணைந்த இளம் வீரர்

இந்நிலையில், தீபக் சாஹரை தொடர்ந்து மற்றொரு வீரரும் சென்னை அணியில் இருந்து விலகி, அவருக்கு பதிலாக அணியில் இணைந்துள்ள வீரர் யார் என்பது பற்றிய தகவலும் வெளிவந்துள்ளது. ஐபிஎல் ஏலத்தில், 14 கோடி ரூபாய் கொடுத்து தீபக் சாஹரை சென்னை அணி எடுத்திருந்தது. ஆனால், காயம் காரணமாக அவர் ஐபிஎல் தொடரில் பங்கேற்கவில்லை.

இதற்கு அடுத்தபடியாக, சென்னை அணியில் இடம்பிடித்திருந்த வேகப்பந்து வீச்சாளர் ஆடம் மில்னேவும் காயம் காரணமாக விலகி இருந்தார். தற்போது, அவருக்கான மாற்று வீரரை சிஎஸ்கே அணி அறிவித்துள்ளது. இலங்கையைச் சேர்ந்த U 19 கிரிக்கெட் வீரர் மதீஷா பதிரானா, சிஎஸ்கே அணியில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மதீஷாவின் பந்து வீச்சு ஸ்டைல், அப்படியே முன்னாள் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மலிங்காவை போல இருக்கும்.

இது குட்டி மலிங்கா ஆச்சே..

சில உள்ளூர் போட்டிகளில், மலிங்காவை போல யார்க்கர் பந்துகளையும் வீசி அசத்தி உள்ளார் மதீஷா. ஏற்கனவே, சென்னை அணியில் இடம்பெற்றுள்ள இலங்கை சுழற்பந்து வீச்சாளர் மஹீஸ் தீக்ஷனா சிறப்பாக பந்து வீசி வருகிறார். அவரை போல, தற்போது சிஎஸ்கேவில் இணைந்துள்ள இலங்கை வீரர் மதீஷா பதிரானாவும் நிச்சயம் அணியின் வெற்றிக்கு உதவுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

ஆடம் மில்னேவுக்கு மாற்று வீரர் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தீபக் சாஹருக்கு பதில் எந்த இந்திய வேகப்பந்து வீச்சாளர், சிஎஸ்கே அணியில் இடம்பெறுவார் என்பது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பை அந்த அணி இன்னும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்.
https://behindwoods.com/bgm8

CRICKET, CSK, MATHEESHA PATHIRANA, ADAM MILNE, ஐபிஎல், சென்னை சூப்பர் கிங்ஸ்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்