‘ஆத்தி... சில்லு சில்லா நொறுக்கிட்டாங்களே’.. காண்ட்ராக்டர் ‘நேசமணி’ ஸ்டைலில் சிஎஸ்கே வெளியிட்ட வீடியோ.. செம வைரல்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

காண்ட்ராக்டர்  நேசமணி ஸ்டைலில் சிஎஸ்கே வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

‘ஆத்தி... சில்லு சில்லா நொறுக்கிட்டாங்களே’.. காண்ட்ராக்டர் ‘நேசமணி’ ஸ்டைலில் சிஎஸ்கே வெளியிட்ட வீடியோ.. செம வைரல்..!
Advertising
>
Advertising

ஐபிஎல்

ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 26-ம் தேதி தொடங்க உள்ளது. இதன் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் மும்பை மைதானத்தில் மோத உள்ளன. இதற்காக மும்பை சென்ற சிஎஸ்கே வீரர்கள் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

10 அணிகள்

இந்த முறை 8 அணிகளுடன் கூடுதலாக 2 அணிகள் என மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன. அதனால் ஐபிஎல் தொடரில் பங்கேற்க இருக்கும் அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் 14 லீக் போட்டிகளில் விளையாட உள்ளன. மொத்தம் 70 லீக் போட்டிகள் நடைபெற உள்ளது.

CSK shares new video with Vadivelu comedy connection

சிஎஸ்கே

இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம், புதிய வீடியோ ஒன்றை தங்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில் வீரர்கள் பயிற்சியின்போது எடுக்கப்பட்ட வீடியோவுக்கு, ப்ரண்ட்ஸ் படத்தில் நடிகர் வடிவேல் நடித்த காண்ட்ராக்டர் நேசமணியின் வசனத்தை எடிட் செய்து வெளியிட்டுள்ளனர்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.

CSK, IPL, VADIVELU

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்