‘இந்த நிலைமையில விளையாடுறது சாதாரண விஷயம் இல்ல’!.. இம்ரான் தாஹிர் பற்றி சிஎஸ்கே போட்ட உருக்கமான பதிவு..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இம்ரான் தாஹிர் குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ட்விட்டரில் உருக்கமான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளது.

மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த 19-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 191 ரன்களை குவித்தது. இதில் அதிகபட்சமாக டு பிளசிஸ் 50 ரன்களும், ஜடேஜா 62 ரன்களும் எடுத்தனர்.

இதனை அடுத்து 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி விளையாடியது. ஆனால் சென்னை அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் பெங்களூரு அணியின் வீரர்கள், சொற்ப ரன்களில் அடுத்தடுத்து அவுட்டாகினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 122 ரன்கள் மட்டுமே அந்த அணியால் எடுக்க முடிந்தது. இதன்மூலம் 69 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி அபார வெற்றி பெற்றது.

இதில் அதிகபட்சமாக பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர் தேவ்தத் படிக்கல் மட்டுமே 34 ரன்கள் எடுத்திருந்தார். சென்னை அணியைப் பொறுத்தவரை ஜடேஜா 3 விக்கெட்டுகளும், இம்ரான் தாஹிர் 2 விக்கெட்டுகளும், ஷர்துல் தாகூர் மற்றும் சாம் கர்ரன் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

இந்த நிலையில் பெங்களூரு அணிக்கு எதிரான வெற்றிக்கு பின் இம்ரான் தாஹிர் குறித்து சென்னை அணி தங்களது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளது. அதில், ‘நோன்புக்கு மத்தியில் அணிக்காக அர்பணிப்புடன் விளையாடியது பற்றி கூற வார்த்தைகளே இல்லை’ என சென்னை அணி பதிவிட்டுள்ளது.

ரம்ஜான் பண்டிக்கைக்காக இம்ரான் தாஹிர் நோன்பை கடைபிடித்து வருகிறார். இதனால் காலை முதல் மாலை உணவு, தண்ணீர் உட்கொள்ளாமல் நோன்பு இருந்து வருகிறா. இந்த நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரின், தனது முதல் போட்டியை நேற்று இம்ரான் தாஹிர் விளையாடினார். போட்டி பகல் 3:30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கியது. வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்ததால், முதலில் பீல்டிங் செய்த பெங்களூரு அணி வீரர்கள் தாக்குப்பிடிக்க முடியவில்லை. இதனால் அடிக்கடி துணியை தண்ணீரில் நனைத்து தலையில் வைத்துக் கொண்டனர்.

இப்படி இருக்கையில் காலையில் இருந்து நோன்பை கடைபிடித்து வரும் இம்ரான் தாஹிர், இப்போட்டியில் 4 ஓவர்களை (16 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்) வீசினார். இதனால் இம்ரான் தாஹிருக்கு மரியாதை செலுத்தும் விதமாக ட்விட்டர் பாராட்டி சென்னை அணி பதிவிட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்