"வேற ரூட்'யா நீ.." 'பிகில்' விஜய்யாக மாறிய தோனி.. இப்டி ஒரு 'வீடியோ' பாத்தா கண்ணு எப்டியா கலங்காம இருக்கும்?
முகப்பு > செய்திகள் > விளையாட்டு15 ஆவது ஐபிஎல் போட்டிகள் நாளை ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக ரவீந்திர ஜடேஜா நியமிக்கப்பட்டிருந்தார்.
இதுவரை அந்த அணியின் கேப்டனாக இருந்து வந்த எம்.எஸ். தோனி, தன்னுடைய கேப்டன் பதவியை ஜடேஜாவிற்கு வழங்குவதாக தெரிவித்திருந்த நிலையில், அணி நிர்வாகமும் இதனை ஏற்றுக் கொண்டுள்ளது.
'நம்பர் 1' கேப்டன் தோனி
கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், சென்னை அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் தோனிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். நடுவே இரண்டு ஆண்டுகள், சிஎஸ்கே அணி ஐபிஎல் போட்டிகளில் களமிறங்கவில்லை என்றாலும், திரும்பவும் மஞ்சள் நிற ஜெர்சியில் தோனியை பார்த்த ரசிகர்கள், கொண்டாடித் தான் தீர்த்தார்கள்.
தலைவன் தலைவன் தான்..
இதுவரை, நான்கு முறை சென்னை அணிக்காக ஐபிஎல் கோப்பையைக் கைப்பற்றியுள்ள தோனியின் மற்ற பல சாதனைகளை எளிதில் விவரித்து விட முடியாது. சர்வதேச போட்டிகளில் தலைமை தாங்கி, இந்திய அணிக்காக பல சாதனைகளை செய்துள்ள தோனி, சென்னை அணியையும் ஒரு தலைவன் போல பலம் வாய்ந்த அணியாக வழிநடத்தினார்.
அவர மாதிரி வர முடியுமா?
இனி அவரது பொறுப்பில் ஒருவரை யோசித்து பார்க்க முடியாத அளவுக்கு சென்னை அணியை வழிநடத்தி, ரசிகர்களை யோசிக்க வைத்தது தோனியின் அற்புதமான கேப்டன்சி. இந்நிலையில், கேப்டன் பதவியில் இருந்து தோனி விலகியுள்ளதையடுத்து, ரசிகர்கள் பலரும் தோனியை குறித்து உருக்கமான பதிவினையும் வெளியிட்டு வந்தனர். ஜடேஜா கூட தன்னுடைய பொறுப்பு பற்றியும், போட்டியின் போது தோனியிடம் கேட்டு முடிவுகளை எடுப்பேன் என்றும் கூறி இருந்தார்.
'பிகில்' விஜய்
இதனிடையே, சிஎஸ்கே வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று, ரசிகர்களை மேலும் ஏங்கச் செய்துள்ளது. பிகில் படத்தில் தந்தை ராயப்பனாக வரும் விஜய், தனது மகன் 'பிகில்' விஜய்யிடம், கால்பந்து போட்டியினால், அந்த ஊர் எப்படி மாறியது என்பது பற்றியும், மகனின் ஆர்வம் குறித்தும் மிகவும் பெருமையுடன் உணர்ச்சிவசப்பட்டு பேசுவார்.
ஒத்துப்போகும் வசனங்கள்
அதே ஆடியோவில், தோனியின் பெருமை குறித்த வீடியோவை ஒப்பிட்டு, சிஎஸ்கே அணிக்காக தோனி என்ன செய்தார் என்பதை மிகவும் உருக்கத்துடன் அமைந்திருக்கும் வகையில் வீடியோ ஒன்றை, சிஎஸ்கே அணி வெளியிட்டுள்ளது. கிட்டத்தட்ட பிகில் விஜய்யை போல, சிஎஸ்கே அணிக்காக தோனி செய்த விஷயங்கள், அந்த வசனங்களுக்கு அப்படியே ஒத்துப் போகிறது.
ரசிகர்கள் உருக்கம்
இதனைக் காணும் சிஎஸ்கே ரசிகர்களும் தோனியின் கேப்டன்சி முடிவுக்கு வந்தது பற்றி, வேதனையில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். ஆனாலும், புதிய கேப்டன் ஜடேஜாவையும் பாராட்டும் ரசிகர்கள், தோனி வழியில் வருங்காலங்களில், சிஎஸ்கே அணியை சிறந்த முறையில் வழி நடத்துவார் என்றும் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- கேப்டனை மாற்றிய CSK.. அன்றே கணித்த கவாஸ்கர்..ஆச்சர்யத்தில் ரசிகர்கள்..!
- இது யாருமே எதிர்பார்க்காத ‘ஷாக்’.. சிஎஸ்கே கேப்டன் பதவியில் இருந்து விலகிய ‘தல’ தோனி.. புது கேப்டன் யார் தெரியுமா?
- தோனி-ரிஷப் பந்த் கம்பேரிசன்.. “இவங்க ரெண்டு பேர் கிட்டையும் பொதுவான ஒரு விஷயம் இருக்கு”.. முன்னாள் சிஎஸ்கே வீரர் சூப்பர் பதில்..!
- ரெய்னாவுக்கு CSK போட்ட 'ட்வீட்'.. உடனே 'சின்ன' தல போட்ட கமெண்ட்.. அப்படி என்ன விசேஷம்?
- "அப்படி எல்லாம் இருக்க வேணாம்.." ராகுலுக்கு அட்வைஸ் பண்ற கேப்'ல.. தோனியை சீண்டினாரா கம்பீர்??.. என்னங்க சொன்னாரு?
- “தோனிக்கு அப்புறம் சிஎஸ்கே கேப்டன் அவர்தான்”.. சுரேஷ் ரெய்னா சொன்ன சூப்பர் டூப்பர் தகவல்..!
- “நீங்க அந்த பழைய ஃபினிஷர் தோனி இல்ல”.. கண்டிப்பா ‘இதை’ பண்ணியே ஆகணும்.. முன்னாள் வீரர் முக்கிய அட்வைஸ்..!
- "திரும்ப வந்துட்டாருங்க அவரு.." ஐபிஎல் தொடரில் மீண்டும் வரும் ரெய்னா.. சென்னை மேட்ச் நடக்குறப்போ சும்மா களை கட்டப் போகுது..
- தோனிக்கு அப்புறம் சிஎஸ்கே கேப்டன் இவர்தான்.. மூத்த வீரரை கை காட்டும் ஆகாஷ் சோப்ரா.. வாய்ப்பு இருக்கா..?
- முன்னாள் சிஎஸ்கே வீரர் பகிர்ந்த வீடியோ.. ஸ்பெஷல் மெசேஜ் சொன்ன 'சுரேஷ் ரெய்னா'.. "மனுஷன் சுத்த தங்கம்யா"