'யாரும் எதிர்பார்க்கல... திடீர்னு வந்து... நான் போறேன்னு சொல்லிட்டாரு'!.. அப்படி என்ன தான் நடந்தது?.. ஏன் ஓய்வை அறிவித்தார் வாட்சன்?.. வெளியான பரபரப்பு தகவல்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் தொடர் உள்ளிட்ட லீக் ஆட்டங்களில் இருந்து ஓய்வு பெற்றுள்ள வாட்சன், மிகவும் வருத்தத்தோடு அந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.
சிஎஸ்கே அணியின் மிக முக்கியமான வீரரும், பல போட்டிகளில் மேட்ச் வின்னராக இருந்தவருமான வாட்சன் நேற்று ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். இந்த ஐபிஎல் சீசனில் வாட்சன் சரியாக ஆடவில்லை.
இந்த நிலையில், நேற்று வாட்சன் தனது ஓய்வு முடிவை எடுத்தார். ஐபிஎல் மட்டுமின்றி மற்ற லீக் தொடர்களில் இருந்து வாட்சன் ஓய்வு பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. வாட்சன் மிகவும் வருத்தத்தோடு தனது ஓய்வு முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.
வாட்சன் பொதுவாக, தான் ஆடும் அணிகளை வெற்றிபெற வைப்பதில் குறியாக இருப்பார். சிஎஸ்கே அணிக்காக கடந்த சீசன் பைனலில் இவர் காலில் ரத்தம் வர வர ஆடினார். அதேபோல் தனது பாட்டி இறந்த போதும் கூட, சிஎஸ்கே அணிக்காக களமிறங்கி தொடர்ந்து இவர் ஆடி வந்தார்.
அணியின் வெற்றிதான் எப்போதும் முக்கியம் என்று இருந்தார். களத்திற்கு வெளியிலும் களத்திற்கு உள்ளேயும் சிஎஸ்கே அணி மீது சென்னை மீதும் அளவு கடந்த பாசம் வைத்து இருந்தார். நான் வேறு அணியில் இருந்திருந்தால் என்னை தூக்கி இருப்பார்கள். சிஎஸ்கேவில் இருந்த ஒரே காரணத்தால்தான் எனக்கு இத்தனை முறை வாய்ப்பு வழங்கப்படுகிறது.
சிஎஸ்கே அணி எனக்கு குடும்பம் போன்றது, என்று வாட்சன் பலமுறை குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் தான், அவர் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். சிஎஸ்கே அணிக்காக கடைசி கட்டத்தில் சரியாக ஆட முடியவில்லை. அணி தன்னை நம்பிய போதும், வாய்ப்பு கொடுத்த போதும் கூட அணியின் வெற்றிக்கு உதவ முடியவில்லை என்ற விரக்தி வாட்சனுக்கு இருந்துள்ளது.
தோனி இந்த தொடரில் பல முறை வாட்சனுக்கு வாய்ப்பு வழங்கினார். ஆனாலும் வாட்சன் இந்த வாய்ப்பு எதையும் பயன்படுத்திக்கொள்ளவில்லை. இதனால், அணிக்குள் உதவ முடியவில்லை என்ற விரக்தியில் வாட்சன் இருந்துள்ளார். இதுதான் அவரின் ஓய்வு முடிவிற்கு முக்கிய காரணம் என்கிறார்கள்.
இன்னொரு பக்கம் அடுத்த சீசனில் கண்டிப்பாக தன்னால் சரியாக ஆட முடியாது என்று வாட்சனுக்கு தெரியும். இதனால் ஏலத்தில் தான் புறக்கணிக்கப்பட வாய்ப்புள்ளது. தனக்கும் சிஎஸ்கே அணிக்கும் தர்ம சங்கடம் ஏற்படக் கூடாது என்று வாட்சன் நேற்று திடீரென வந்து ஓய்வு முடிவை அறிவித்து உள்ளார்.
மேலும், அணிக்குள் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டால் அது சிஎஸ்கே அணிக்குதான் நல்லது. தன்னுடைய பேட்டிங்கிலும் எதுவும் சரியில்லை. தோனியும் கோர் குரூப்பை மாற்ற போகிறார். இதனால் நாமாக விலகுவதுதான் சிறந்தது என்று வாட்சன் ஓய்வு முடிவை எடுத்துள்ளார், என்று கூறுகிறார்கள்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- வாட்சன் ஓய்வு... அடிச்சு புடிச்சு நாடு திரும்பிய சிஎஸ்கே... ரிவ்யூ மீட்டிங்கில் தோனி செய்யப்போவது 'இது' தான்!?.. அப்ப... ரெய்னா, ஹர்பஜன் நெலம?.. அதிர்ச்சி தகவல்!
- ‘மக்களின் உணர்வோடு விளையாடாதீங்க’!!!... ‘கிரிக்கெட், சினிமா பிரபலங்களுக்கு’... ‘மதுரை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு...!!!
- "அவங்க ஜெயிக்க எல்லாம் நோ சான்ஸ்!... கேப்டன் 'இத' பண்ணி வேணா வின் பண்ணலாம்"... 'அடித்துக்கூறி பிரபல வீரர் நக்கல்!!!'...
- கெயிலை கடுப்பேற்றிய அந்த சம்பவம்... ஈகோவை சீண்டியதால் களத்தில் அதிரடி!.. ஓய்வு முடிவை எடுக்கும் யுனிவர்சல் பாஸ்?.. 'இது' தான் காரணம்!.. அதிர்ச்சி பின்னணி!
- 'ஆர்சிபி-யோட ப்ளஸ், மைனஸ் பத்தி...' 'ரூம்ல வச்சு டிஸ்கஷ் பண்ணினோம்...' - ஷ்ரேயாஸ் போட்ட கச்சிதமான பிளான்...!
- “இதுக்கு என்ன சொல்றீங்க?” .. மூன்றாவது அம்பயரிடம்.. வேண்டுமென்றே ஒரண்டை இழுத்த வீரர்!’.. ‘ஐபிஎல் நிர்வாகத்தின் முடிவு இதுவா?’
- Video: 5 வயசுல என் ‘அம்மாகிட்ட’ அத சொன்னேன்.. ‘3 வருஷம் நீங்க காட்டுன அன்பு..!’.. உருகிய வாட்சன்..!
- 'ஐபிஎல் போட்டிகளில்...' 'தோனியோட அந்த ஒரு ரெக்கார்ட மட்டும்...' - ஓவர்டேக் பண்ணிய தமிழக வீரர்...!
- ‘கோலி அப்பவே சுதாரிச்சுகிட்டார்!’.. ‘ஆனா மாட்டிக்கிட்ட ஐபிஎல் அணிக்கு .. இப்ப இந்த நிலை!’ .. வலுக்கும் புகார்கள்!
- 'இது மட்டும் நடந்திட்டா’...!!! 'நமக்கு சான்ஸ் கிடைக்காம’... ‘சோலி முடிஞ்சு போயிருமே கடவுளே’...!! கடைசி லீக் போட்டியில் நடக்கப் போகும் பரபரப்பு...!!!