"ஜடேஜா உள்ள, பிராவோ வெளிய".. சிஎஸ்கே அணி வெளியிட்ட அதிகாரப்பூர்வ லிஸ்ட்.. வேற யாரெல்லாம் இருக்காங்க?.. IPL 2023

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கடந்த மே மாதம் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் புதிதாக களமிறங்கி இருந்த குஜராத் டைட்டன்ஸ் அணி கோப்பையை கைப்பற்றி இருந்தது.

Advertising
>
Advertising

Also Read | ஐபிஎல் போட்டியில் இருந்து ஓய்வை அறிவித்த பொல்லார்ட்.. மும்பை அணிக்காக புது ரூட்டில் கொடுக்க போகும் என்ட்ரி!!

முன்னதாக, 2021 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் 8 அணிகள் ஆடி இருந்தது. இதனைத் தொடர்ந்து, குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் ஆகிய அணிகள் புதிதாக களமிறங்கி மொத்தம் 10 அணிகள் ஐபிஎல் தொடரில் ஆடி இருந்தது.

லக்னோ மற்றும் குஜராத் ஆகிய இரண்டு அணிகளுமே அரை இறுதி போட்டிக்கு முன்னேற்றம் கண்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, இறுதி போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி அறிமுக தொடரிலேயே ஐபிஎல் கோப்பையை வென்று அசத்தி இருந்தது ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி.

இதனைத் தொடர்ந்து, 2023 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடருக்கான பணிகளும் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதே போல, டிசம்பர் மாதம் 23 ஆம் தேதியன்று கேரள மாநிலத்தில் வைத்து ஐபிஎல் ஏலம் நடைபெற உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருந்தது. இதனைத் தொடர்ந்து, ஐபிஎல் ஏலத்திற்கு முன்பாக ஒவ்வொரு அணிகளும் எந்தெந்த வீரர்களை தக்க வைத்துக் கொள்ள போகிறார்கள் என்பது குறித்தும், எந்தெந்த வீரர்களை விடுவித்துள்ளார்கள் என்பது குறித்தும் பட்டியலை அதிகாரபூர்வமாக வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தக்க வைக்கப்பட்டுள்ள வீரர்கள் மற்றும் விடுவித்த வீரர்கள் குறித்த பட்டியலையும் வெளியிட்டுள்ளது.

அதன்படி, நீண்ட நாட்களாக சென்னை அணியில் ஜடேஜா நீடிப்பாரா அல்லது வேறு அணியில் ஆடுவாரா உள்ளிட்ட பல கேள்விகள் சென்னை அணியை சூழ்ந்திருந்தது. தற்போது அதற்கான விடையும் கிடைத்துள்ளது. அதன்படி, ஜடேஜாவை சிஎஸ்கே தக்க வைத்துக் கொண்டது.

மறுபக்கம், பிராவோ, ராபின் உத்தப்பா (ஏற்கனவே ஓய்வை அறிவித்து விட்டார்), ஆடம் மில்னே, ஹரி நிஷாந்த், க்றிஸ் ஜோர்டன், பகத் வர்மா, KM ஆசிப், நாராயண் ஜெகதீசன் உள்ளிட்ட வீரர்களை சிஎஸ்கே விடுவித்துள்ளது. இதில் பல ஆண்டுகளாக சென்னை அணியின் நட்சத்திர வீரராக வலம் வந்த பிராவோவை அவர்கள் விடுவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இது தவிர, தோனி, ரவீந்திர ஜடேஜா, டெவான்  கான்வே, ருத்துராஜ் கெய்க்வாட், ராயுடு, மொயீன் அலி, தீபக் சாஹர் உள்ளிட்ட பல வீரர்களை மீண்டும் தக்க வைத்துக் கொண்டது. சிஎஸ்கேவை தவிர அனைத்து அணிகளும் இது போல தக்க வைத்துக் கொண்ட வீரர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது.

Also Read | "ஃபீல் பண்ணாதீங்க, மாஸ் என்ட்ரி குடுப்பேன்".. உயிரிழப்பதற்கு முன் மாணவி வைத்த வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்.. மனதை ரணமாக்கும் சோகம்!!

CRICKET, CSK, CSK RETENTION, PLAYERS LIST, BRAVO, JADEJA, DHONI

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்