"என்னங்க இதெல்லாம்??..." 'சென்னை' ரசிகர்களை கடுப்பாக்கிய 'ஸ்டைரிஸ்'... 'சிஎஸ்கே' கொடுத்த தரமான 'பதிலடி'!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

14 ஆவது ஐபிஎல் சீசன் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதியன்று ஆரம்பமாகவுள்ள நிலையில்,  இதன் முதல் போட்டியில், நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகள் மோதுகின்றன.

கொரோனா தொற்று காரணமாக, கடந்த ஆண்டு ஐபிஎல் தொடர், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றிருந்தது. இந்த சீசனில், ஐபிஎல் தொடரில் பலம் வாய்ந்த அணியாக கருதப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, முதல் முறையாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாமல், புள்ளிப் பட்டியலில் 7 ஆவது இடம் பெற்று வெளியேறியிருந்தது.

இதனால், இந்த முறை மீண்டும் பழைய ஃபார்முக்கு திரும்பி, தங்களை நிரூபிக்கும் நோக்கில், சென்னை வீரர்கள் உள்ளனர். அதே போல, சிஎஸ்கே ரசிகர்களும் இதனை எதிர்பார்த்து காத்து வருகின்றனர்.


இந்நிலையில், சில தினங்களுக்கு முன், நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக ஆடியவருமான ஸ்காட் ஸ்டைரிஸ் (Scott Styris), சிஎஸ்கே ரசிகர்கள் கொந்தளிக்கும் வகையிலான ட்வீட் ஒன்றை செய்திருந்தார்.

 

நடைபெறவிருக்கும் ஐபிஎல் தொடரில், எந்த அணி கோப்பையை கைப்பற்றும் என்பது பற்றியும், புள்ளிப் பட்டியலில், எந்தெந்த அணிகள் எந்தெந்த இடத்தினை பிடிக்கும் என்பது பற்றியுமான ட்வீட் ஒன்றை சில தினங்களுக்கு முன் செய்திருந்தார். தனது ட்வீட்டில், மும்பை அணிக்கு முதலிடத்தை கொடுத்த சாத் ஸ்டைரிஸ், சென்னை அணிக்கு கடைசி இடம் கிடைக்கும் என கணித்துள்ளார்.

சென்னை அணி பழைய பலத்துடன் திரும்ப வரும் என காத்திருக்கும் ரசிகர்களுக்கு மத்தியில், இந்த ட்வீட் கடும் கோபத்தை உண்டு பண்ணியுள்ளது. ஒரு சீசனை வைத்தே ஒரு அணியை இப்படியா தீர்மானிப்பது என்ற ரீதியிலான கமெண்ட்டுகளை செய்திருந்தனர்.

 

 

இந்நிலையில், ஸ்காட் ஸ்டைரிஸ் ட்வீட்டை கவனித்த சென்னை அணி, பதிலுக்கு ட்வீட் ஒன்றைச் செய்துள்ளது. அதில், 'எக்ஸ் மச்சி, ஒய் மச்சி? (Ex Machi. Why Machi?)' என ஸ்காட் ஸ்டைரிஸ் இதற்கு முன்பு சென்னை அணியில் இருந்த போதும் இப்படியா பேசுவது என்ற ரீதியில், அவரது ஃபோட்டோவை குறிப்பிட்டு கூறியிருந்தது.

 

சிஎஸ்கேவின் இந்த பதிவைக் கண்ட ஸ்டைரிஸ், தனது ட்வீட்டிற்கு மன்னிப்பு கேட்கும் வகையில் பதில் தெரிவித்துள்ளார். ஸ்காட் ஸ்டைரிஸ் மற்றும் சிஎஸ்கே அணிக்கு இடையேயான உரையாடல், நெட்டிசன்களிடையே அதிகம் வைரலாகி வருகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தங்களது முதல் போட்டியில், டெல்லி கேப்பிடல்ஸ் அணியை சந்திக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்