சிஎஸ்கே போட்ட பதிவு.. 'Smiley' மூலம் கமெண்ட் செய்த 'டு பிளஸ்ஸிஸ்'.. அடுத்த சில மணி நேரத்தில் நடந்த 'சம்பவம்'

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் மெகா ஏலம், கடந்த வார இறுதியில், மிகவும் சிறப்பாக நடந்து முடிந்தது.

Advertising
>
Advertising

ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்ற பத்து அணிகளும், தங்களுக்கு தேவையான வீரர்களை கடும் போட்டிக்கு மத்தியில் எடுத்து, அசத்தலான அணியையும் உருவாக்கி, ஐபிஎல் போட்டிகளுக்காக தயாராக திட்டம் போட்டு வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து, ஐபிஎல் ஏலத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எடுத்துள்ள சில முடிவுகள், ரசிகர்கள் மத்தியில் அதிகம் கேள்விகளையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியிருந்தது.

பாப் டு பிளஸ்ஸிஸ்

அதாவது, பிராவோ, உத்தப்பா உள்ளிட்ட சீனியர் வீரர்களை மீண்டும் அணியில் சேர்த்த சிஎஸ்கே, கடந்த ஆண்டு, சென்னை அணி கோப்பையைக் கைப்பற்ற முக்கிய காரணமாக இருந்த டு பிளஸ்ஸிஸை மீண்டும் அணியில் சேர்க்க முயற்சிகள் மேற்கொள்ளவில்லை. இதனால், பெங்களூர் அணி, அவரை 7 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்திருந்தது.

சிஎஸ்கே ரசிகர்கள் வேதனை

டுபிளஸ்ஸிஸை போல, ரெய்னாவையும் சிஎஸ்கே அணி ஏலத்தில் எடுக்காமல் போனது, அதிகம் விமர்சனத்தை சந்தித்திருந்தது. சிஎஸ்கே அணிக்காக பல வெற்றிகள் தேடிக் கொடுத்த டு பிளஸ்ஸிஸ், சிஎஸ்கே அணியில் இருந்து விலகியதும் உருக்கமான வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தார். இதனை அதிகம் பகிர்ந்த சிஎஸ்கே ரசிகர்கள், மன வேதனையும் அடைந்தனர்.

BPL இறுதி போட்டி

இன்னொரு பக்கம், இந்தியாவில் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வருவது போல, பங்களாதேஷில் தற்போது நடைபெற்று வரும் பங்களாதேஷ் பிரீமியர் லீக் (BPL) என்னும் தொடர், இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதன் இறுதி போட்டியில், Fortune Barishal மற்றும் Comilla Victorians ஆகிய அணிகள் மோதி வருகிறது. இதில், Comilla Victorians அணியில் டு பிளஸ்ஸிஸ் மற்றும் மொயீன் அலி ஆகிய வீரர்களும், Fortune Barishal அணியில் பிராவோவும் ஆடி வருகின்றனர்.

சிஎஸ்கே அணி வாழ்த்து

போட்டிக்கு முன்பாக, சிஎஸ்கே அணி, தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், சிஎஸ்கே அணி வீரர்களான மொயீன் அலி மற்றும் பிராவோ ஆகியோரை குறிப்பிட்டு வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தது. இந்த பதிவு ரசிகர்கள் மத்தியல் அதிகம் வைரலான நிலையில், பலரும் டு பிளஸ்ஸிஸை ஏன் குறிப்பிடவில்லை என கேள்வி எழுப்பினர். தொடர்ந்து, டு பிளஸ்ஸிஸ் கூட, தன்னை ஏன் சேர்க்கவில்லை என்பது போல, ஸ்மைலி ஒன்றைக் கமெண்ட் செய்திருந்தார்.

ரசிகர்கள் கருத்து

தொடர்ந்து, பலரும் டு பிளெஸ்ஸிஸ் பெயரை இணைக்காதது பற்றி கேள்வி எழுப்பிய நிலையில், அடுத்த சில மணி நேரத்தில், பிராவோ, மொயீன் அலி மற்றும் டு பிளஸ்ஸிஸ் ஆகிய மூன்று பேரையும் இணைத்து, வீடியோ ஒன்றை குறிப்பிட்டு, மூவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. தொடர்ந்து, முதல் போஸ்ட்டில், டு பிளஸ்ஸிஸ்  போட்ட கமெண்ட்டையும் இதன் பிறகு, டெலிட் செய்தார் என தெரிகிறது.

சிஎஸ்கே அணியின் பதிவு, நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் வைரலான நிலையில், இது குறித்து பல விதமான கருத்துக்களையும் அவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

FAF DU PLESSIS, CSK, BPL, MOEEN ALI, DWAYNE BRAVO

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்