"போன வருஷம், 9 கோடிக்கு சிஎஸ்கே எடுத்த பிளேயர்.. இந்த தடவ ஒரு கோடிக்கும் தேறலயே.." தலை கீழாக மாறிய வாழ்க்கை

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

15 ஆவது ஐபிஎல் தொடர், மார்ச் மாத இறுதியில் இந்தியாவில் வைத்து ஆரம்பமாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertising
>
Advertising

கடந்த சீசனில், 8 அணிகள் ஆடியிருந்த நிலையில், இந்த முறை, குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் ஆகிய அணிகள், புதிதாக இணைந்துள்ளது.

10 அணிகள் பங்கேற்கும் 15 ஆவது ஐபிஎல் தொடர் மீது அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், இதற்கான மெகா ஏலம், நேற்றும் இன்றும் பெங்களூரில் வைத்து நடைபெற்று வருகிறது.

சுவாரஸ்ய சம்பவம்

இதில், நேற்றைய தினத்தில் பல வீரர்கள் மிகச் சிறப்பான தொகைக்கு ஏலம் போயினர். சிறந்த வீரர்கள் பெயர் அறிவிக்கப்பட்டதும், பல அணிகள் முட்டி மோதிக் கொண்டது. இன்னொரு பக்கம், எதிர்பார்த்த வீரர்களை எந்த அணிகளும் எடுக்க முன் வரவில்லை. சில சமயத்தில், ஒரு வீரருக்காக இரு அணிகள், கடைசி வரை, கடும் போட்டியும் போட்டது.

சிஎஸ்கே பிளான்

இப்படி பல சுவாரஸ்ய சம்பவங்கள், அதிகம் விறுவிறுப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் தேர்வும் நேற்றைய தினத்தில், அதிக கவனத்தை பெற்றிருந்தது. டு பிளஸ்ஸிஸ், ரெய்னா உள்ளிட்ட சிஎஸ்கேவின் சிறந்த வீரர்களை எடுக்க ஆர்வம் காட்டாத சிஎஸ்கே அணி, பிராவோ, உத்தப்பா, அம்பத்தி ராயுடு, தீபக் சாஹர் உள்ளிட்ட மற்ற முன்னாள் சிஎஸ்கே வீரர்களை எடுத்திருந்தது.

பரபரப்பு

மேலும், இன்றைய தினத்தில், ஷிவம் துபே, தீக்ஷனா, ஆடம் மில்னே, டெவான் கான்வே உள்ளிட்ட சில இளம் வீரர்களை, சிஎஸ்கே அணி ஏலத்தில் எடுத்து வருகிறது. இந்நிலையில், கடந்த ஆண்டு, 9.25 கோடி ரூபாய்க்கு, சிஎஸ்கே அணி ஏலத்தில் எடுத்த வீரர் ஒருவரை, இந்த முறை 90 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் ஒரு அணி எடுத்துள்ளது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சாதனை படைத்த வீரர்

கடந்த சீசனில், சென்னை அணி, கிருஷ்ணப்பா கவுதம் என்ற வீரரை, 9.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்திருந்தது. அப்போது நடைபெற்ற ஏலத்தில், சர்வதேச போட்டிகளில் ஆடாத ஒருவர், அதிக தொகைக்கு ஏலம் போன சாதனையையும் கவுதம் படைத்திருந்தார். கடந்த முறை, சிஎஸ்கே அணியில் இடம்பெற்றிருந்த போதும், ஒரு போட்டியில் கூட களமிறங்கும் வாய்ப்பு, கவுதமிற்கு கிடைக்கவில்லை.

கிருஷ்ணப்பா கவுதம்

தொடர்ந்து, ஐபிஎல் ஏலத்திற்கு முன்பாக, அவரை சிஎஸ்கே அணி விடுவிக்கவும் செய்திருந்தது. தொடர்ந்து, இன்று ஏல பட்டியலில் இடம்பெற்றிருந்த கிருஷ்ணப்பா கவுதமை, வெறும் 90 லட்சம் ரூபாய்க்கு புதிய ஐபிஎல் அணிகளில் ஒன்றான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் வாங்கியுள்ளது. சிஎஸ்கே அணி, அவரை எடுப்பதற்கான முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை.

விவாத பொருள்

சென்னை அணி அவ்வளவு பெரிய தொகைக்கு வாங்கி, சாதனை படைத்த வீரரை, அந்த தொகையின் பத்து சதவீதத்துக்கும் குறைவாக, அடுத்த ஏலத்திலேயே புதிய அணி ஒன்று வாங்கியுள்ளது, ஐபிஎல் ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய விவாத பொருளாகியுள்ளது.

K GOWTHAM, CSK, IPL AUCTION 2022, LUCKNOW SUPER GIANTS, 9 CRORES

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்