"முதல் 'மேட்ச்'ல தான் பிரச்னைன்னு பாத்தா.. அடுத்ததும் 'சிக்கல்' தான் போலயே??.." 'சிஎஸ்கே'வுக்கு வந்துள்ள பெரிய 'தலைவலி'!.. "எப்படி தான் சமாளிக்க போறங்களோ!?.."

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

14 ஆவது ஐபிஎல் சீசனின் நேற்றைய போட்டியில், பஞ்சாப் மாற்றம் ராஜஸ்தான் ஆகிய அணிகள் மோதியிருந்த நிலையில், 4 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி திரில் வெற்றி பெற்றது.

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 221 ரன்கள் குவித்தது. கே எல் ராகுல் மற்றும் தீபக் ஹூடா ஆகியோர் அதிரடியாக ஆடி ரன்கள் குவித்தனர். தொடர்ந்து, இலக்கை நோக்கி ஆடிய ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன், அதிரடியாக ஆடி, பந்துகளை சிக்ஸர்கள் மற்றும் பவுண்டரிகளுக்கு பறக்க விட்டார்.

இருந்த போதிலும், நூலிழையில் 4 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. இரு அணியிலும் சிறந்த பந்து வீச்சாளர்கள் இருந்த போதிலும், இரு அணியிலுள்ள அதிரடி வீரர்களும் சிறப்பாக ஆடி, ரன் குவித்தனர். இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களது அடுத்த போட்டியில், வரும் 16 ஆம் தேதி, பஞ்சாப் அணியையும், அதற்கடுத்த போட்டியில், ராஜஸ்தான் அணியை, 19 ஆம் தேதியும் சந்திக்கவுள்ளது.

முன்னதாக, தங்களின் முதல் போட்டியில், டெல்லி அணியை எதிர்கொண்ட சிஎஸ்கே, பேட்டிங்கில் சிறப்பாக ஆடினாலும், 189 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய டெல்லி அணியைக் கட்டுப்படுத்த முடியாமல், பந்து வீச்சில் அதிகமாக சொதப்பியது. வெளிநாட்டு வீரர்களான லுங்கி நிகிடி மாற்றம் பெஹன்ட்ராஃப் ஆகியோர், இன்னும் அணியில் இணையவில்லை. மூன்றாவது போட்டிக்கு பிறகு தான் அவர்கள் இணைவார்கள் என தெறிகிறது.

சென்னை அணியில் தற்போதுள்ள பந்து வீச்சாளர்களை வைத்து, இனிவரும் போட்டிகளில், அதிரடி வீரர்களைக் கொண்ட பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணியை சமாளிப்பதில் சிக்கல் உருவாகும் என தோன்றுகிறது.


அதே போல, சென்னை அணியில் இளம் பந்து வீச்சாளர்கள் சிலர் இடம்பெற்றுள்ள நிலையில், அவர்களை அணியில் இணைத்து ஆடினால், நிச்சயம் அவர்கள் முத்திரை பதிப்பார்கள் என்றும் ரசிகர்கள் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அப்படி இல்லாமல், முதல் போட்டியில் களமிறங்கிய அதே சிஎஸ்கே அணி, அடுத்தடுத்த போட்டிகளில் களமிறங்கினாலும், பந்து வீச்சாளர்கள் நிச்சயம் அதிக முன்னேற்றத்துடன் செயல்பட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்