VIDEO : '"தல'ய இந்த மாதிரி நாங்க பாத்ததே இல்ல"... 'கூல்' கேப்டன் குறித்து வெளியான லேட்டஸ்ட் 'தகவல்'... எதிர்பார்ப்பில் சி.எஸ்.கே 'ரசிகர்கள்'!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியாவில் நடக்கவிருந்த ஐ.பி.எல் போட்டிகள் அனைத்தும் ஐக்கிய அரபு அமீரகத்தில் வைத்து வரும் 19 ஆம் தேதியன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.
இந்தாண்டு ஐ.பி.எல் சீஸனின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி துபாய் சென்றதில் இருந்து பல்வேறு சோதனைகளை சந்தித்து வருகிறது. கொரோனா சோதனையில், ஆரம்பத்தில் இரண்டு கிரிக்கெட் வீரர்கள் உட்பட 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, சென்னை அணியின் நட்சத்திர வீரரான சுரேஷ் ரெய்னா மற்றும் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் ஆகியோர் தனிப்பட்ட காரணங்களுக்காக ஐ.பி.எல் தொடர் முழுவதிலும் இருந்து விலகுவதாக அறிவித்தனர். இது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும் அவர்கள் அதிகம் எதிர்பார்ப்பது அணியின் கேப்டன் தோனியை தான்.
கடந்த சில வாரங்களுக்கு முன், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தோனி அறிவித்திருந்த நிலையில், ஐ.பி.எல் போட்டியில் எப்போது அவர் களமிறங்குவார் என ரசிகர்கள் காத்துக் கிடக்கின்றனர். பொதுவாக, அனைத்து சீசன்களிலும் பயிற்சி செய்யும் நேரத்தை விட இம்முறை தோனி அதிக நேரம் மிகவும் தீவிரமாக பயிற்சிகளை மேற்கொண்டு வருவதால் அவரது ஆட்டத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
அதே போல, சென்னை அணியின் சிஇஓ கே. விஸ்வநாதன், அணியின் மிகவும் இக்கட்டான சூழ்நிலைகளில் அணியை சிறந்த முறையில் தோனி வழி நடத்தியுள்ளார். அதே போல, இம்முறையும் தலைவன் அனைத்தையும் பார்த்துக் கொள்வான் என தெரிவித்துள்ளார்.
முன்னதாக, சுரேஷ் ரெய்னா அணியில் இல்லாத காரணத்தினால் அவருக்குப் பதிலாக முரளி விஜய் களமிறக்கப்படலாம் என கருதப்படுகிறது. பல சோதனைகள் வந்தாலும் அணியை சிறந்த முறையில் கொண்டு செல்ல 'கூல்' கேப்டன் தோனி உள்ளதே சென்னை ரசிகர்களுக்கு மிகுந்த நம்பிக்கையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
வீடியோவைக் காண லிங்க் க்ளிக் செய்க:
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'இத்தன வருஷத்துல'... 'தோனி இத செஞ்சு நான் பாத்ததே இல்ல'... 'பிரபல இந்திய வீரரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ள'... 'CSK அணியின் பயிற்சி வீடியோ!'...
- VIDEO : 'மும்பை' இந்தியன்ஸ் வெளியிட்ட 'வீடியோ',,.. "என்னடா, ஸ்பின் 'பவுலிங்' எல்லாம் போடுறாரு??.." 'ஷாக்' ஆன ரசிகர்கள்... மெர்சல் காட்டிய 'பும்ரா'!!!
- "சேட்டை புடிச்ச ஆளுயா இந்த 'மனுஷன்'",,.. 'கிறிஸ்' கெயில் செய்த 'ரகளை'... வைரலாகும் அசத்தல் 'வீடியோ'!!!
- 'வெளியானது ஐபிஎல் அட்டவணை...' சென்னை சூப்பர் கிங்ஸ் யாரோட ஃபர்ஸ்ட் மேட்ச்...? - முழு விபரங்கள்...!
- 'சிஎஸ்கேவின் அடுத்த கேப்டன் யாரு?'.. 'அதெல்லாம் தல தோனி எப்பவோ தன் மனசுல..'.. பிராவோ அதிரடி!
- "இது என்னடா 'சி.எஸ்.கே'க்கு வந்த சோதனை",,.. 'ரெய்னா'வை தொடர்ந்து விலகும் மற்றொரு 'வீரர்',,.. வெளியான பரபரப்பு 'தகவல்'!!!
- இவங்க தான் இந்த தடவ 'ஐ.பி.எல்' ஜெயிக்கப் போறாங்க,,.. 'பிராட்' ஹாக் சொன்ன 'பதில்',,.. கமெண்டில் ரவுண்டு கட்டிய 'ரசிகர்கள்',,. காரணம் 'என்ன'?
- அதான் 'ரெய்னா' கெளம்பிட்டாருல்ல,,.. இனிமே யாரு உங்க டீமோட 'vice' கேப்டன்??,,.. 'சி.எஸ்.கே' அணியின் அசத்தல் 'பதில்' - வைரல் 'ட்வீட்'!!!
- 'தொடர் சர்ச்சைகளுக்கு பின்'... 'முதல்முறையாக சிஎஸ்கே, தோனி குறித்து'... 'மனம் திறந்த சுரேஷ் ரெய்னா!'...
- 'ஐ.பி.எல்' போட்டிகளில் இருந்து 'ரெய்னா' வெளியேறியது இதனால் தான்,,.. அவரே பதிவிட்ட 'ட்வீட்',,.. பரபரப்பை ஏற்படுத்திய 'பதிவு'!!!