'மொதல்லையே நான் ப்ளான் பண்ணிட்டேன்...' 'எப்படி மூணு விக்கெட் என்னால எடுக்க முடிஞ்சுதுன்னா...' - சீக்ரெட் உடைத்த மொயின் அலி...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்த வருட ஐபிஎல் சீசனின் 1பனிரெண்டாவது லீக் ஆட்டம் நேற்று (19-04-2021) மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல் அணியும் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற சஞ்சு சாம்சன் முதலில் பந்து வீசுவது என முடிவு செய்தார்.

முதலாவதாக பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்களை இழந்து 188 ரன்கள் குவித்துள்ளது. சிஎஸ்கே வீரர்கள் அனைவரும் அதிரடியாக விளையாடினார்கள். ஆயினும் சொற்ப ரன்களில் ஒவ்வொருவராக அவுட் ஆயினர்.

அதில் மொயின் அலி 26 ரன்கள், ராயுடு 27 ரன்கள் , தோனி 18 ரன்கள் குவித்துள்ளார்கள். இந்த போட்டியில் சிஎஸ்கே வீரர்கள் மொத்தம் 11 சிக்ஸர்களை அடித்து மூக்கு மேல் விரல் வைக்க செய்தார்கள். 189 ரன்கள் எடுத்தால் தான் வெற்றி என்ற கொஞ்சம் அசாதரணமான இலக்கை நோக்கி ராஜஸ்தான் களம் கண்டது.

இந்தநிலையில், பட்லரை தவிர அத்தனை பேட்ஸ்மேன்களும் சரசரவென விக்கெட்களை இழந்தனர். மொத்தம் 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி ஒன்பது விக்கெட்களை இழந்து வெறும் 143 ரன்கள் மட்டுமே அடித்தனர்.  பட்லர் அடித்த 49 ரன்களே ராஜஸ்தான் அணியின் உச்சபச்ச ஸ்கோர்.

சிஎஸ்கே பவுலர்கள் மொயின் அலி மூன்று விக்கெட்கள், ரவிந்திர ஜடேஜா மற்றும் சாம் கரன் தலா 2 விக்கெட்களை வீழ்த்தி இருக்கின்றனர். இதுபோக ஜடேஜா 4 கேட்ஸ்களை பிடித்து வேற லெவல் மாஸ் காட்டினார். இப்படியாக சென்னை அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் அதிரடியாக ராஜஸ்தானை வீழ்த்தியது. சிஎஸ்கேவின் இந்த இரண்டாவது வெற்றியை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னை அணியின் ஆல்ரவுண்டர் மொயின் அலி 3 ஓவர்கள் பவுலிங் போட்டு வெறும் 7 ரன்கள் மட்டுமே கொடுத்தார். அதற்கும் ஒருபடி மேலாக மூன்று ஓவர்களில் 3 விக்கெட்களை வீழ்த்தி கெத்து காட்டினார். பேட்டிங்கில் 26 ரன்கள் அடித்தார். இதன்காரணமாக ஆட்டநாயகன் விருது இவர் வசம் சென்றது..

போட்டி முடவடைந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மொயின் அலி “இங்கு நான் அதிக ஸ்கோர் செய்ய வேண்டும். அது தான் என்னோட வேலை. நாங்கள் அனைவரும் சிறப்பாக விளையாடினோம். ஒவ்வொரு வரும் தங்களது சிறப்பான பங்களிப்பை அளித்தனர்.

இடது கை பேட்ஸ்மன்கள் விளையாட வரும் போது என்னால் இன்று விக்கெட் எடுக்க முடியும் என்று நம்பினேன். இது ஸ்பின்னர்களுக்கு நல்லாதாக இருக்கிறது. நாம் சரியான இடத்தில் பந்தை போட்டால் அது நமக்கு விக்கெட்களை பெற்று தர வாய்ப்புகளை உருவாக்கும்” என்று மொயின் அலி தெரிவித்தார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்