“சாப்பாட்டை கதவுக்கு வெளியே வச்சிட்டு போயிருவாங்க”!.. கொரோனாவுடன் போராடிய ‘வேதனை’ நாட்கள்.. சிஎஸ்கே பிரபலம் உருக்கம்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டபோது அனுபவித்த வலி குறித்து சிஎஸ்கே பயிற்சியாளர் உருக்கமாக பகிர்ந்துள்ளார்.

Advertising
>
Advertising

சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி கோப்பையை வென்றது. ஐபிஎல் தொடரின் முதல் பாதி இந்தியாவில் நடைபெற்றது. அப்போது வீரர்கள் பயிற்சியாளர் என பலருக்கும் தொற்று ஏற்பட்டதால் தொடர் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதனை அடுத்து இரண்டாம் பாதி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இதில் சிஎஸ்கே அணியின் பவுலிங் பயிற்சியாளர் பாலாஜி மற்றும் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹசி ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதில் பாலாஜி விரைவில் குணமடைந்து அணிக்கு திரும்பினார். ஆனால் மைக் ஹசிக்கு மீண்டும் தொட்டு உறுதியானது. அதனால் அவர் டெல்லியில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் கொரோனா சிகிச்சையில் ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து மைக் ஹசி பகிர்ந்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ‘ஐபிஎல் தொடருக்காக கிளம்பும் முன் எனக்குள் நிறைய யோசனைகள் ஓடியது. ஆனால் எனது பணி மிகவும் முக்கியம் என்பதால் சிஎஸ்கே அணிக்காக புறப்பட்டுச் சென்றேன். தனிமைப்படுத்தல் காலத்தின்போது ஒரு தனி அறையில் அடைக்கப்பட்டேன். வெளியே செல்லவும் முடியாது, உள்ளேயும் யாரும் வரமுடியாது. கதவுக்கு வெளியே உணவை வைத்து விட்டு சென்று விடுவார்கள்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டபோது மிகவும் மோசமாக உணர்ந்தேன். காய்ச்சல் மிகவும் அதிகமாக இருந்தது, இரவு தூங்கி விழிப்பதற்குள் குறைந்தது நான்கு சட்டைகளை மாற்றி விடுவேன். அந்த அளவுக்கு உடம்பு முழுவதும் உயர்வை ஊற்றி விடும். ஏதாவது வேலை செய்யலாம் என்று மேஜையில் அமர்வேன், ஆனால் உடனடியாக சோர்வடைந்து விடுவதால், தூங்க தான் தோன்றும். அதனால் நேரம் எப்போது வேகமாக செல்லும் என்று எதிர்பார்த்துக் கொண்டே இருப்பேன்.

எனக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் ஒன்றை மட்டும் நினைத்திருப்பார்கள். அதாவது உலகின் மிகவும் மோசமான சூழல் நிலவும் இடத்தில் நான் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறேன் என்று. ஏனென்றால் அப்போது டெல்லியில் கொரோனாவின் தாக்கம் மிகவும் அதிகமாக இருந்தது. மருத்துவமனைகளில் வாசலில் மக்களின் கூட்டம் அலைமோதியது. அவற்றைப் பார்க்கும்போது எனக்கு மிகவும் வேதனையாக இருந்தது. நான் மிகவும் அதிர்ஷ்டசாலி என்று தான் கூற வேண்டும். ஏனென்றால் என்னை போல் மிகவும் மோசமான சூழலில் இருந்த பலரும் உயிரிழந்துள்ளனர்’ என மைக் ஹசி உருக்கமாக கூறியுள்ளார்.

CSK, CORONA, MICHAELHUSSEY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்