இந்த ட்விஸ்ட்டை கொஞ்சம் கூட எதிர்பார்க்கலயே.. சிஎஸ்கே தனி.. மும்பை தனி.. வெளியானது ஐபிஎல் அட்டவணை..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் 15-வது சீசனில் அணிகள் இரண்டு குழுக்களாகப் பிரிந்து மோதும் என அறிவிப்பு வெளியாகியள்ளது.

இந்த ட்விஸ்ட்டை கொஞ்சம் கூட எதிர்பார்க்கலயே.. சிஎஸ்கே தனி.. மும்பை தனி.. வெளியானது ஐபிஎல் அட்டவணை..!
Advertising
>
Advertising

உக்ரைன்-ரஷ்யா போரால் உலகமே பதற்றத்துல இருக்கு.. இந்த நேரத்துல சீனா பார்த்த வேலை.. பக்கத்து நாடு பரபரப்பு குற்றச்சாட்டு..!

ஐபிஎல் 15-வது சீசனுக்கான மெகா ஏலம் கடந்த 12, 13 ஆகிய தேதிகளில் பெங்களூரில் நடைபெற்றது. இதில் 10 அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை வாங்கிவிட்டன. இதனைத் தொடர்ந்து மார்ச் 26-ம் தேதி முதல் ஐபிஎல் போட்டிகள் நடைபெறவுள்ளன.

இதற்கான அட்டவணையை தற்போது  ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதில் 5 அணிகள் முறையே இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அந்த குழு, இதுவரை ஐபிஎல் கோப்பைகள் வென்றதை வைத்தும், இறுதிப்போட்டிக்கு முன்னேறியதை வைத்தும் வரிசையாக அணிகள் பிரிக்கப்பட்டுள்ளன. இதனால் அதிக கோப்பைகள் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதல் குழுவிலும், நான்கு கோப்பைகளை வென்ற சென்னை சூப்பர் அணி இரண்டாவது குழுவிலும் இடம்பெற்றுள்ளது.

Group 1: மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட்ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேபிடல்ஸ், லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ்.

Group 2: சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைடன்ஸ்.

இந்த இரு குழுவில் இருக்கும் அணிகள், அதே குழுவில் இருக்கும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். அடுத்து, குழு 1-ல் இருக்கும் அணி, அதற்கு நேராக குழு 2-ல் இடம்பெற்றிருக்கும் அணிக்கு எதிராக 2 முறை மோதும். இதனைத் தொடர்ந்து மற்ற குழுவில் இருக்கும் அணிகளுடன் 1 முறை மோதும். இதன்மூலம் ஒவ்வொரு அணியும் 14 லீக் போட்டிகளில் மோதுகின்றன. ஐபிஎல் தொடரில் இந்தியா-பாகிஸ்தானாக அறியப்படும் சிஎஸ்கே-மும்பை அணிகள் வெவ்வேறு குழுவில் இடம்பெற்றுள்ளது சற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகக்கோப்பை போல் இரு அணிகளாக பிரிக்கப்பட்டு ஐபிஎல் தொடர் நடைபெற உள்ளது ரசிகர்களிடையே எதிர்ப்பு ஏற்படுத்தியுள்ளது.

என்ஜினியரிங் படிக்கும்போதே அந்த பழக்கம் இருந்திருக்கு.. சிவகங்கை அருகே நடந்த கொடூரம்..!

CRICKET, IPL, CSK-MI, IPL 2022, ஐபிஎல், மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்