MS DHONI: இது தோனி லேட்டஸ்ட்.. "எங்கு தொடங்கும் எங்கு முடியும்".. வெந்து தணிந்தது காடு படத்தின் தீம் பாடலுடன் CSK நிர்வாகம் வெளியிட்ட வீடியோ!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

தோனியின் சமீபத்திய வீடியோவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

Advertising
>
Advertising

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தற்போதைய கேப்டனுமான தோனிக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

2004 ஆம் ஆண்டிலிருந்து 2019 ஆம் ஆண்டுவரை சர்வதேச அளவில் இந்தியாவிற்காக 90 டெஸ்ட், 350 ஒருநாள் மற்றும் 98 டி20 போட்டிகளில் ஆடி மொத்தம் 17 ஆயிரத்துக்கும் அதிகமான ரன்களை குவித்தவர் தோனி. இவரது தலைமையில் ஒருநாள் மற்றும் T20 போட்டி உலகக்கோப்பைகளை இந்திய அணி வென்றுள்ளது.

பரபரப்பான மேட்ச்களிலும் பொறுமையுடன் வெற்றியை நோக்கி அணியை அழைத்துச் செல்வதால் ரசிகர்கள் இவரை 'மிஸ்டர் கூல்' என்று ரசிகர்கள் அன்போடு அழைக்கிறார்கள்.

2020 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த தோனி, தொடர்ந்து ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாடி வருகிறார். ஐபிஎல் தொடர் துவங்கிய 2008 ஆம் ஆண்டில் இருந்து சென்னை அணியின் கேப்டனாகவும் தோனி தொடர்கிறார். 2010 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் தேதி தன்னுடைய தோழியான சாக்ஷியை தோனி திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ஸிவா என்ற பெண் குழந்தை உள்ளது.

பொதுவாக தோனியின் பிரதானமான குணம் எந்த சூழ்நிலையிலும் மிகவும் பொறுமையுடன் அணியை வெற்றியை நோக்கி நகர்த்தி செல்வதே. பேட்டிங் செய்யும் போதும் சரி, கையில் கிளவ்ஸ் உடன் ஸ்டம்புகளுக்கு பின்புறம் நிற்கும் போதும் சரி, அவருடைய இலக்கு வெற்றியாக மட்டுமே இருக்கும்.

இந்நிலையில் இந்தியா சிமெண்ட் நிறுவனத்தின் 75வது பிளாட்டின விழாவில் தோனி கலந்து கொண்டார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தாய் நிறுவனம் இந்தியா சிமெண்ட் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விழாவில் மத்திய அமைச்சர் அமித் ஷா, ஆளுநர் ரவி, முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம், மத்திய இணை அமைச்சர் முருகன், தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் கிரிக்கெட் வீரர் தோனி கலந்து கொண்ட வீடியோவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்தியா சிமெண்ட் சீருடையில் தோனி தோன்றும் இந்த வீடியோவுக்கு வெந்து தணிந்தது காடு படத்தில் ஏ. ஆர். ரஹ்மான் குரலில் இடம்பெற்ற Life of Muthu பாடலை பின்னணி இசையாக இணைந்திருந்தது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.


மேலும் இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

MSDHONI, CSK, CRICKET, INDIA CEMENT

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்