“இன்னைக்கு நான் விக்கெட் எடுப்பேன்”.. சொன்ன மாதிரியே தட்டித்தூக்கிய CSK இளம் வீரர்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் தொடரில் முதல் விக்கெட்டை எடுத்தது குறித்தும் சிஎஸ்கே வீரர் மஹீஷ் தீக்‌ஷனா பகிர்ந்துள்ளார்.

Advertising
>
Advertising

"தோனி தான் அதுக்கு காரணம்ன்னா.. நாங்க 10 பேரும்.. லெஸி குடிக்கவா போனோம்".. கடுப்பான ஹர்பஜன் .. என்ன ஆச்சு?

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி நேற்று மும்பை மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி 4 விக்கெட் இழப்புக்கு 216 ரன்களை குவித்தது. இதனை அடுத்து பேட்டிங் செய்த பெங்களூரு வீரர்கள் சிஎஸ்கே அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

அதனால் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 23 வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி அபார வெற்றி பெற்றது. இப்போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி தங்களது முதல் கணக்கை தொடங்கியுள்ளது.

இதில் சிஎஸ்கே அணியை பொறுத்தவரை மஹீஷ் தீக்‌ஷனா 4 விக்கெட்டுகளும், ஜடேஜா 3 விக்கெட்டுகளும், பிராவோ மற்றும் முகேஷ் சௌத்ரி ஆகியோர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர். இப்போட்டியில் சிஎஸ்கே வெற்றி பெற சுழற்பந்து வீச்சாளர் மஹீஷ் தீக்‌ஷனா முக்கிய காரணமாக இருந்தார். இப்போட்டியில் பெங்களூரு அணியின் கேப்டன் டு பிளசிஸ், அனுஜ் ராவத், ஷாபாஸ் அகமது,  பிரபு தேசாய் ஆகிய முக்கிய விக்கெட்டுகளை எடுத்தார்.

இந்த நிலையில் போட்டி முடிந்த பின் பேசிய மஹீஷ் தீக்‌ஷனா, ‘நாங்கள் மிகப்பெரிய ரன்களை அடித்து இருந்தோம். அதனால் அதிகமாக டாட் பால்களை கொடுக்க வேண்டும் என்றே சென்றோம். ஆனாலும் பெங்களூரு அணி அடித்து ஆடும் என்று எங்களுக்கு தெரியும். எங்கள் திட்டப்படி விளையாடினோம். அதில் நல்ல முடிவு கிடைத்தது. என்னுடைய முதல் ஐபிஎல் விக்கெட், எனக்கு மிகவும் பிடித்த வீரர் டு பிளசிஸை எடுத்ததில் மகிழ்ச்சி. போட்டிக்கு முன்பாக பயிற்சியாளரிடமும், வீரர்களிடமும் இன்று நான் விக்கெட்டுகளை எடுப்பேன் என கூறினேன்’ என மஹீஷ் தீக்‌ஷனா கூறியுள்ளார். இலங்கை வீரரான மஹீஷ் தீக்‌ஷனாவை சிஎஸ்கே அணி, ஐபிஎல் ஏலத்தில் 70 லட்சம் ரூபாய்க்கு எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

‘இப்ப வரை சென்னை தான் இதுல முதல் இடத்துல இருக்கு’.. முதல் வெற்றியிலேயே ‘வேறலெவல்’ சாதனை படைத்த CSK..!

CRICKET, IPL, CSK, MAHEESH THEEKSHANA, IPL FIRST WICKET, IPL 2022, FAF DU PLESSIS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்