ஐபிஎல்-ல விளையாடணும்னு ‘ஆசையா’ வந்த மனுசன்.. கடைசியில இப்படி ஆகிடுச்சே.. நொந்துபோன சிஎஸ்கே வீரர்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் தொடர் பாதியில் நிறுத்தப்பட்டதால் சிஎஸ்கே வீரர் ஒருவர் நொந்துபோயுள்ளார்.

ஐபிஎல் தொடரில் விளையாடி வந்த கிரிக்கெட் வீரர்கள் தொடர்ந்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வந்ததை அடுத்து, தேதி குறிப்பிடாமல் ஐபிஎல் தொடரை பிசிசிஐ ஒத்திவைத்தது. இதனை அடுத்து கிரிக்கெட் வீரர்கள் பத்திரமாக வீடு திரும்ப அனைத்து உதவிகளையும் பிசிசிஐ செய்து தரும் என்று தெரிவித்தது.

இந்த நிலையில் ஐபிஎல் தொடர் பாதியிலேயே நிறுத்தப்பட்டதால் சிஎஸ்கே வீரர் ஜேசன் பெஹன்டிராப் (Jason Behrendorff) விரக்தி அடைந்துள்ளார். இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்னர், சிஎஸ்கே அணியில் இடம்பெற்றிருந்த ஆஸ்திரேலிய வீரர் ஜோஸ் ஹசில்வுட் (Josh Hazlewood) தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்தார். நீண்ட நாட்களாக பயோ பபுளில் இருப்பதாகவும், சிறிது காலம் குடும்பத்துடன் நேரம் செலவிட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனால் அவருக்கு பதிலாக மற்றொரு ஆஸ்திரேலிய வீரரான ஜேசன் பெஹன்டிராப்பை சிஎஸ்கே அணி தேர்வு செய்தது. அப்போது அவர் ஆஸ்திரேலிய உள்ளூர் கிரிக்கெட் தொடரில் விளையாடிக் கொண்டிருந்தார். ஆனாலும் ஐபிஎல் தொடரில் விளையாட உள்ள ஆசையில், அந்த தொடரை பாதியில் விட்டுவிட்டு அவசர அவசரமாக இந்தியா வந்தார். இங்கு 7 நாட்கள் தனிமை, 10 நாட்கள் பயிற்சிக்கு பின்னர் சிஎஸ்கே அணியில் இணைந்தார்.

ஆனால் 2 போட்டிகளாக ப்ளேயின் லெவனில் ஜேசன் பெஹன்டிராப் இடம்பெறவில்லை. ஏற்கனவே விளையாடி வந்த வீரர்கள் சிறப்பாக ஆடி வந்ததால் அணியில் மாற்றம் செய்யாமல் சிஎஸ்கே அணி விளையாடி வந்தது. மேலும் புள்ளிப்பட்டியல், ரன்ரேட் என அனைத்திலும் முதலில் இருந்ததால், இனி வரும் போட்டிகளில் புதிய வீரர்களை கேப்டன் தோனி களமிறக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் கொரோனா தொற்று காரணமாக ஐபிஎல் தொடர் திடீரென ஒத்திவைக்கப்பட்டது ஜேசன் பெஹன்டிராப்-க்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது ஆஸ்திரேலியா-இந்தியா இடையேயான விமான சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் விளையாடவும் முடியாமல், நாடு திரும்பவும் முடியாமல் அவர் நொந்துபோயுள்ளதாக கூறப்படுகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்