"இது சும்மா 'ட்ரைலர்' தான்... இதுக்கே 'இப்டி'ன்னா... நாங்க ஆளையே தூக்குறவங்க.." 'ரகளை'யை ஸ்டார்ட் செய்த 'தாஹிர்'... வைரலாகும் 'ட்வீட்'!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐ.பி.எல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் 19 ஆம் தேதியன்று ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன.

ஐ.பி.எல் போட்டிகள் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அனைத்து அணி வீரர்களும் துபாயில் தீவிரமாக பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒரு நாள் போட்டித் தொடரின் இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில், ஆஸ்திரேலியா அணியை சேர்ந்த ஹாசில்வுட் (Hazlewood) 10 ஓவர்களில் சிறப்பாக பந்து வீசி 2 மெய்டன்களுடன் 27 ரன்கள் மட்டுமே கொடுத்து ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்.

அதே போல, இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான சாம் குரான் (Sam Curran) 10 ஓவர்கள் பந்து வீசி 35 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்களையும் கைப்பற்றினார். இவர்கள் இருவரும் ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடவுள்ள நிலையில், இவர்களின் சிறப்பான பந்து வீச்சை பாராட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ட்வீட் செய்தது.

இதனை பகிர்ந்த சென்னை அணியின் சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர் (Imran Tahir), 'இது சும்மா ட்ரைலர் தான் மா. இன்னும் நிறைய சிறப்பான சம்பவங்கள் காத்துகிட்டு இருக்கு' என குறிப்பிட்டு பகிர்ந்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்தது முதல், இம்ரான் தாஹிர் தமிழில் அதிகம் ட்வீட் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. 

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்