டு பிளஸ்ஸிஸ் இடத்துக்கு கச்சிதமா ஒருத்தர 'சிஎஸ்கே' புடிச்சுட்டாங்க.. "இவரு அப்பவே டபுள் செஞ்சுரி அடிச்சவர் ஆச்சே.."

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் மெகா ஏலம், நேற்று பெங்களூரில் ஆரமபமான நிலையில், தொடர்ந்து இரண்டாவது நாளாக, இன்றும் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Advertising
>
Advertising

இதில், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஏலத்திற்கு முன்பாக, தோனி, ஜடேஜா, ருத்துராஜ் மற்றும் மொயீன் அலி ஆகிய வீரர்களை அணியில் தக்க வைத்துக் கொண்டிருந்தது.

சிஎஸ்கே அணி

கடந்த சீசனில், சிஎஸ்கே அணி கோப்பையைத் தட்டிச் செல்ல முக்கிய காரணமாக இருந்த டுபிளஸ்ஸிஸை, அந்த அணி தக்க வைத்துக் கொள்ளவில்லை. சிஎஸ்கே அணியின் இந்த முடிவு, ரசிகர்கள் மத்தியில் அதிகம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தது. இருந்த போதும், ஏலத்தில் சிஎஸ்கே அணி, மீண்டும் டு பிளஸ்ஸிஸை சொந்தமாக்கி கொள்ளும் என்றே ரசிகர்கள் கருதினர்.

கடுப்பான சிஎஸ்கே ரசிகர்கள்

ஆனால், நேற்று நடைபெற்ற ஏலத்தில், டு பிளஸ்ஸிஸை எடுக்க சிஎஸ்கே அணி, முயற்சிகள் எதையும் மேற்கொள்ளவில்லை. இறுதியில், பெங்களுர் அணி, அவரை 7 கோடி ரூபாய்க்கு வாங்கியிருந்தது. முன்னாள் சிஎஸ்கே வீரர்கள் அதிகம் பேரை, ஏலத்தில் வாங்கிய சிஎஸ்கே அணி, டு பிளஸ்ஸிஸை எடுக்க முயற்சிகள் மேற்கொள்ளாதது, சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் விமர்சனத்தை உண்டு பண்ணியது.

கேள்வி

அது மட்டுமில்லாமல், டு பிளஸ்ஸிஸை எடுக்க முயலாதது பற்றி, ரசிகர்கள் அதிகம் கேள்வி எழுப்பவும் செய்திருந்தனர். இந்நிலையில், இரண்டாம் நாள் ஏலத்தில், டு பிளஸ்ஸிஸுக்கு பதிலாக, வேறு ஒரு அதிரடி தொடக்க வீரரை சிஎஸ்கே எடுத்துள்ளது, ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெவான் கான்வே

நியூசிலாந்து அணி வீரர் டெவான் கான்வேவை சிஎஸ்கே அணி, ஒரு கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது. இவர் இங்கிலாந்து அணிக்கு எதிரான தனது அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே, 200 ரன்கள் அடித்து சாதனை படைத்துள்ளார். அதே போல, பல டி 20 போட்டிகளிலும், அதிரடியாக ஆடி ரன்களைக் குவித்துள்ளார். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான கான்வேவை, சிஎஸ்கே அணி ஏலத்தில் எடுத்துள்ளது, நிச்சயம் சிஎஸ்கே அணிக்கு அதிக பலம் சேர்க்கும்.

அதே போல, டு பிளஸ்ஸிஸுக்கு சிறந்த மாற்று வீரராகவும் டெவான் கான்வே இருப்பார் என சிஎஸ்கே ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.

FAF DU PLESSIS, IPL AUCTION 2022, CSK, DEVON CONWAY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்