"நாங்க சிஎஸ்கே 'ஃபேன்ஸ்' தான், ஆனா.." 'Faf Du Plessis'க்கு வேண்டி ஸ்பெஷல் பேனரை பறக்க விட்ட சென்னை 'ரசிகர்கள்'
முகப்பு > செய்திகள் > விளையாட்டுமுன்னாள் சிஎஸ்கே வீரர் பாப் டு பிளெஸ்ஸிஸ்ஸிற்காக, சிஎஸ்கே ரசிகர்கள் ஏந்தி வந்த பேனர் தொடர்பான புகைப்படங்கள், தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.
கடந்த ஐபிஎல் தொடர் வரை, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த விராட் கோலி, அந்த பதவியில் இருந்து விலகிக் கொண்டார்.
இதனையடுத்து, கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில், பாப் டு பிளஸ்ஸிஸ், தினேஷ் கார்த்திக் உள்ளிட்ட பல வீரர்களை பெங்களூர் அணி எடுத்திருந்தது.
மேலும், கேப்டனாக யாரை பெங்களூர் அணி அறிவிக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில், சென்னை அணிக்காக ஆடி வந்த டு பிளெஸ்ஸிஸை புதிய கேப்டனாக பெங்களூர் அணி நியமித்திருந்தது.
வெற்றி கணக்கைத் தொடங்கிய 'ஆர்சிபி'
தற்போது நடைபெற்று வரும் 15 ஆவது ஐபிஎல் தொடரில், டு பிளெஸ்ஸிஸ் தலைமையிலான பெங்களூர் அணி, இதுவரை இரண்டு போட்டிகள் ஆடியுள்ளது. முதல் போட்டியில், பஞ்சாப் அணியிடம் தோல்வியை தழுவிய பெங்களூர் அணி, நேற்று நடந்த கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில், வெற்றி கணக்கை தொடங்கி இருந்தது.
சிஎஸ்கே ரசிகர்கள் வேதனை
முன்னதாக, பஞ்சாப் அணிக்கு எதிரான முதல் போட்டியில், பெங்களூர் அணி 205 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது, டு பிளெஸ்ஸிஸ் 88 ரன்கள் எடுத்து அசத்தி இருந்தார். இதனைக் கண்ட சென்னை ரசிகர்கள், சிஎஸ்கே அவரை மீண்டும் தக்க வைத்திருக்கலாம் என ஏக்கத்துடன் குறிப்பிட்டு வந்தனர்.
கடந்த சீசனில், சென்னை அணி கோப்பையைக் கைப்பற்ற, அந்த அணியின் தொடக்க ஜோடியான டு பிளெஸ்ஸிஸ் - ருத்துராஜ் ஆகியோர், முக்கிய காரணமாக இருந்தனர். அப்படி இருந்தும், சென்னை அணி இந்த முறை டு பிளெஸ்ஸிஸ்ஸை ஏலத்தில் எடுக்காமல் போனது, ரசிகர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தி இருந்தது.
ஐபிஎல் போட்டி ஆரம்பமாவதற்கு முன்பாக, சென்னை வீரர்களை டு பிளெஸ்ஸிஸ் சந்தித்துக் கொண்ட புகைப்படங்களும் அதிகம் வைரலாகி இருந்தது. பெங்களூர் அணிக்காக டு பிளெஸ்ஸிஸ் ஆடி வந்தாலும், சென்னை ரசிகர்கள் இன்னும் அவர் மீது அன்பு காட்டி வருகின்றனர்.
பேனர் பறக்க விட்ட ரசிகர்கள்
அதனை நிஜமாக்கும் வகையில், சென்னை அணியின் ரசிகர்கள், பெங்களூர் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது பறக்க விட்ட பேனர்கள் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. போட்டியைக் காண வந்த ரசிகர்கள் கையில் இருந்த பேனரில், ஒரு பக்கம் சிஎஸ்கே உடையில் டு பிளெஸ்ஸிஸ் இருக்கும் புகைப்படமும், இன்னொரு பக்கம் ஆர்சிபி உடையில், டு பிளெஸ்ஸிஸ் இருக்கும் புகைப்படமும் இருந்தது.
நடுவே, "நாங்கள் சிஎஸ்கே ரசிகர்கள், ஆனால் பாப்'பிற்காக இங்கு வந்தோம்" என டு பிளெஸ்ஸிஸ் ஆட்டத்தை பார்க்க வந்ததை அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். மற்ற அணிகளை விட, சிஎஸ்கே அணியில் ஆடும் வீரர்கள் மீது ரசிகர்களுக்கு இருக்கும் பிணைப்பு, கிரிக்கெட் போட்டியைத் தாண்டிய ஒரு நெருக்கமான உறவு என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "எல்லாத்துக்கும் 'கவுதம்' அண்ணா தான் காரணம்.." ஒரே மேட்ச்'ல திரும்பி பார்க்க வைத்த இளம் வீரர்.. 'சிஎஸ்கே' மேட்ச்'லயும் சம்பவம் 'Loading' போல
- லட்டு மாதிரி கெடச்ச வாய்ப்பு.. ‘KKR பண்ண பெரிய தப்பு’.. கடைசி நேர பரபரப்பில் பறிபோன வெற்றி..!
- "இந்த 4 டீம் தான் 'பிளே ஆப்' போகும்.." அதிரடியாக கணித்த சுரேஷ் ரெய்னா.. லிஸ்ட்'ல சிஎஸ்கே இருக்கா இல்லையா?
- ஜிம்மில் வொர்க் அவுட் மோட்.. “அடுத்த வருச IPL-ல பார்ப்போம்”.. ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த டி20 லெஜண்ட்..!
- தினேஷ் கார்த்திக், மோர்கன் இருந்த டைம்'ல... அந்த பையன டீம்'ல சேக்காம வீட்லயே உக்கார வெச்சாங்க.. 'KKR'ஐ விளாசிய முகமது கைஃப்
- “இந்நேரம் நான் அங்க இருந்திருக்கணும்”.. “வீட்டுல இருந்து ஐபிஎல் மேட்ச் பாக்க வேதனையா இருக்கு”.. முன்னாள் சிஎஸ்கே வீரர் ஆதங்கம்..!
- ஐபிஎல் வரலாற்றில் வித்தியாசமான சாதனை.. ‘முதல்ல முகமது சிராஜ்.. இப்போ ஹர்ஷல் படேல்’.. அசத்தும் RCB வீரர்கள்..!
- “கோலி இந்த ஐபிஎல் சீசன்ல 600 ரன்னுக்கு மேல அடிப்பார்”.. முன்னாள் RCB ஸ்டார் ஆருடம்..!
- ‘என்ன டு பிளசிஸ் இதெல்லாம்’.. இதையா ‘ரிவ்யூ’ கேட்டீங்க..? வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!
- "இன்னும் ஒரே ஒரு தடவ உங்கள அப்டி பாக்க முடியாதா??.." விருப்பப்பட்ட சிஎஸ்கே வீரர்.. தோனி சொன்ன பதில்