"இதுனால தான் 'ஜாதவ்'க்கு 'சான்ஸ்' குடுத்துட்டே இருக்காங்களா??..." 'சிஎஸ்கே' அணியில் மீண்டும் எழுந்த 'பரபரப்பு'!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

அனைத்து ஐபிஎல் சீசன்களிலும் பலம் வாய்ந்த அணியாக விளங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இந்த முறை சொதப்பலாக ஆடி வருகிறது.

இதுவரை 10 போட்டிகளில் ஆடியுள்ள சென்னை அணி, 3 போட்டிகளில் மட்டுமே வெற்றி கண்டுள்ளது. மீதமுள்ள நான்கு ஆட்டங்களிலும் வென்றால் கூட மற்ற லீக் போட்டிகளின் முடிவைப் பொறுத்தே சென்னை அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவது உறுதியாகும்.

ஆனால், சென்னை அணி தற்போதுள்ள பார்மில் மீதி ஆட்டங்களில் வெல்லுமா என்பதே கேள்விக்குறியாகி உள்ளது. இந்த ஐபிஎல் சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆரம்பிப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர், சென்னை அணியின் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா தனிப்பட்ட காரணங்களுக்காக தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அவரைத் தொடர்ந்து, சென்னை அணியின் மற்றொரு வீரர் ஹர்பஜன் சிங்கும் தொடரிலிருந்து விலகினார். 

இவர்களது விலகலுக்கு பின்னால் அணியின் நிர்வாகத்துடன் ஏற்பட்ட தகராறு தான் காரணம் என தகவல் ஒன்று பரவியது. அதே போல தோனியுடனும், ரெய்னாவுக்கு தகராறு இருந்ததாக மற்றொரு தகவல் பரவி பரபரப்பை கிளப்பியது. 

இந்நிலையில், ரெய்னா அணியில் இருந்து விலகிய மறுநாள், சென்னை வீரர் ஜாதவ் தனது ட்விட்டர் பக்கத்தில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், 'சிறப்பான இடத்தை நோக்கி செல்லும் போது அதனை விட்டு விலக ஆயிரம் காரணம் இருக்கும். ஆனால், அதனுடன் தொடர்ந்து செல்ல ஒரு காரணம் மட்டுமே இருக்கும்' என குறிப்பிட்டிருந்தார். 

 

ரெய்னாவை தான் ஜாதவ் மறைமுகமாக குறிப்பிடுகிறார் என இந்த ட்வீட் அப்போதைக்கு மிகப்பெரும் பரபரப்பை கிளப்பியிருந்தது. இதனையடுத்து, தற்போது சென்னை அணியை பொறுத்தவரை மிக சுமாராக ஆடி வருவது ஜாதவ் தான் ஒரு போட்டியில் கூட அவர் அணியின் வெற்றிக்காக உதவாத போது, அவர் மீது எழுந்த விமர்சனத்தால், ஜாதவை தோனி ஒன்றிரண்டு போட்டிகளில் அணியில் எடுக்காமல் இருந்தார். 

ஆனால், தற்போது ஜாதவ் மீண்டும் அணியில் இடம்பெற்றுள்ள நிலையில், பெரிய தாக்கம் எதையும் ஏற்படுத்தவில்லை. ரசிகர்களின் அதிக வெறுப்பை ஜாதவ் சம்பாதித்துள்ள நிலையில், அவர் ஏன் தொடர்ந்து அணியில் நீடிக்கிறார் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

தோனிக்கு மிகவும் வேண்டப்பட்ட வீரராக ஜாதவ் இருப்பதால் தான் வாய்ப்புகள் தொடர்ந்து வழங்கப்படுகிறது எனவும் பலர் விமர்சனம் செய்தனர். ரெய்னா விலகிய போது அவரை மறைமுகமாக தாக்கிய ஜாதவிற்கு வாய்ப்புகள் வழங்கப்படுவதற்கு பின்னால் சென்னை அணிக்கும் ரெய்னாவிற்கும் ஏற்பட்ட தகராறு உண்மை தானா என பலர் கேள்விகளை எழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்