'யாரு ஜெயிச்சாங்க... யாரு தோத்தாங்க... அது முக்கியம் இல்ல'!.. அடுத்து யாரு ஜெயிக்கப் போறாங்கனு... இவங்க 2 பேரும் சொல்லாம சொல்லிட்டாங்க!.. போட்றா விசில!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான கடைசி ஒரு நாள் போட்டியின் முடிவில், யாரும் எதிர்பார்த்திராத ஒரு ஆச்சரியம் அரங்கேறியுள்ளது.
இந்தியா-இங்கிலாந்து இடையேயான ஒரு நாள் போட்டித் தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதில் 3வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில், முதலாவதாக பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர் முடிவில் 329 ரன்கள் எடுத்திருந்தது.
அதன்பிறகு, 330 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்களை இழந்து 322 ரன்கள் மட்டும் குவித்து 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருக்கிறது. இதில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் சாம் கரன் 95 ரன்கள் மற்றும் மாலன் 50 ரன்கள் குவித்து இருக்கின்றனர்.
இதில், இந்திய பந்துவீச்சாளர்கள் சர்துல் தாகூர் 4 விக்கெட்டுகளும் புவனேஸ்வர் குமார் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதன் மூலம் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை கைப்பற்றி இருக்கிறது. இந்திய அணி டெஸ்ட்(3-1), ஒருநாள்(2-1), டி20(3-2) என மூன்று தொடரையும் கைப்பற்றி இருப்பதால் அனைவரும் இந்திய அணியை பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களான ஷர்துல் தாகூர் மற்றும் சாம் கரன் இருவரும் கடைசி ஒருநாள் போட்டியில் அதிரடியாக விளையாடிய அனைவரது கவனத்தையும் ஈர்த்தனர். இந்த போட்டியில் சர்துல் தாகூர் 4 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.
மேலும், பேட்டிங்கில் 30 ரன்களை குவித்து அணிக்கு உதவினார். இங்கிலாந்து ஆல்ரவுண்டர் சாம் கரன் இந்தப் போட்டியில் 95 ரன்கள் இருக்கிறார். ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியிருக்கிறார்.
இதன் காரணமாக, சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் தங்கள் அணியின் வீரர்கள் நல்ல ஃபார்மில் இருப்பதால், அடுத்துவரும் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்கு சாதகமாக இருக்கும் என்று கருதுகின்றனர். அதனை சமூக வலைதளங்களில் அவர்கள் கொண்டாடியும் வருகின்றனர்.
மேலும், ரசிகர்கள் தோனியின் வளர்ப்பு எப்பவும் சூப்பராக தான் இருக்கும் என்றும் கூறிவருகின்றனர். இதையடுத்து ஐபிஎல் ஏலத்தில் தேர்வு செய்யப்பட்ட இங்கிலாந்து வீரர் மொயின் அலி இந்தாண்டு சிஎஸ்கே அணிக்காக விளையாட இருக்கிறார். இவரும் இந்த இங்கிலாந்து தொடரில் ஓரளவு சிறப்பாக விளையாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "என்னோட டார்கெட்டே வேற மா"... 'அப்போ 2 வருஷமா... இந்த பிளான்-ஐ தான் போட்டு வச்சிருந்தாரா?"... 'ரொம்ப thanks புவி'!!
- ‘விடாமுயற்சி இருந்தா உங்களுக்கு அது கிடைக்கும்’!.. வெற்றிக் கோப்பையுடன் ‘நடராஜன்’ பதிவிட்ட உணர்ச்சிகரமான பதிவு..!
- "இந்த ஒரு 'ஐபிஎல்' ரெக்கார்ட அடிச்சு துவம்சம் பண்ணிடனும்.." மனம் திறந்த 'உத்தப்பா'!.. "அட, இது மட்டும் நடந்தா 'சிஎஸ்கே' மாஸ் காட்டுவாங்க போலயே!!"
- VIDEO: கேட்ச்னா இது கேட்ச்...! 'எங்க வர்ற பந்த எப்படி பிடிக்குறார் பாருங்க...' - சான்ஸே இல்ல, வேற லெவல்...!
- 'நமக்கு தான் அவர் சுட்டிக் குழந்தை... ஆனா அவருக்கு ரொம்ப பெரிய மனசு'!.. சாம் கர்ரனின் உருக்கமான பேச்சு!.. 'நட்டு'வ பத்தி சுட்டிக்குழந்தை சொன்னது என்ன தெரியுமா?
- ‘தோனியோட சாயலை அப்படியே அவர்கிட்ட பார்த்தேன்’!.. இளம்வீரரை தாறுமாறாக புகழ்ந்த பட்லர்..!
- Delhi Capitals-க்கு பயிற்சியாளர் ஆன இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர்.. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
- VIDEO: ‘ஒரே ஒரு ஷாட் தான்’.. ‘தம்பி அந்த பேட்டை கொஞ்சம் காட்டுங்க’.. மிரண்டுபோன பென் ஸ்டோக்ஸ்..!
- இதை யாராவது நோட் பண்ணீங்களா..? புது ஜெர்சியில் சிஎஸ்கே லோகோவுக்கு மேலே இருக்கும் 3 ஸ்டார்.. காரணம் என்ன தெரியுமா..?
- VIDEO: ‘க்ரீஸை தொட்டு விளக்கியும் அம்பயர் கண்டுக்கவே இல்லையே’!.. கடுப்பான கேப்டன் கோலி..!