"தோனி பேருக்கு அர்ச்சனை பண்ணுங்க".. CSK Boys-ன் சம்பவம்.. குருக்கள் கொடுத்த லுக்.. வீடியோ..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

CSK ரசிகர்கள் தோனி பெயருக்கு அர்ச்சனை செய்யும் வீடியோ தற்போது ரசிகர்களுக்கு மத்தியில் வைரலாக பரவி வருகிறது.

Advertising
>
Advertising

Images are subject to © copyright to their respective owners.

ஐபிஎல் 2023

கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது ஐபிஎல் தொடர். கடந்த வருடத்திலிருந்து பத்து அணிகள் இந்த தொடரில் பங்கேற்று வருகின்றன. அதன்படி சில தினங்களுக்கு முன்னர் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் அட்டவணை வெளியிடப்பட்டது. மார்ச் 31ஆம் தேதி துவங்கி டிசம்பர் 28 ஆம் தேதி வரை இந்தியாவில் இந்த வருடத்திற்கான ஐபிஎல் போட்டிகள் நடைபெற இருக்கின்றன. இந்தத் தொடரின் முதல் போட்டியில் சென்னை அணியை எதிர்த்து குஜராத் அணி விளையாட இருக்கிறது.

Images are subject to © copyright to their respective owners.

கடந்த சீசனில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாமல் லீக் தொடரிலேயே வெளியேறி இருந்தது. ஆகவே, இந்த முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை கைப்பற்றவேண்டும் என ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

MS தோனி

கடந்த 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் முதன் முதலில் ஆரம்பிக்கப்பட்ட போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக மகேந்திர சிங் தோனி தேர்வு செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து தற்போது வரை சிஎஸ்கே அணியின் கேப்டனாக தோனி தொடர்கிறார். மற்ற அணிகளுக்கு கேப்டன்கள் ஒருபுறம் மாறிக்கொண்டே இருக்கையில் தோனி இத்தனை ஆண்டுகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்தி வருகிறார். ஐபிஎல் தொடரை பொறுத்தவரையில் தோனி இதுவரையில் 234 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் 4978 ரன்களை அவர் குவித்திருக்கிறார். இதில் 24 அரை சதங்களும் அடங்கும்.

மேட்ச் பரபரப்பான சூழ்நிலையில் இருக்கும்போதும், பொறுமையுடன் அணியை வெற்றியின் பக்கம் அழைத்துச் செல்வதில் தோனி ஒரு வித்தைக்காரர். இதன் காரணமாகவே ரசிகர்கள் தோனியை கூல் கேப்டன் என்றும் மிஸ்டர் கூல் என்றும் அழைக்கின்றனர்.

Images are subject to © copyright to their respective owners.

வீடியோ

இந்த சூழ்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்கள் கோவிலில் அர்ச்சனை செய்து வழிபாடு செய்திருக்கின்றனர். இது தொடர்பாக வைரலாகி வரும் அந்த வீடியோவில் குருக்களிடம் மகேந்திர சிங் தோனி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் பெயரை இளைஞர்கள் கூறுகின்றனர். அதைக்கேட்டு அருகில் இருந்தவர்கள் புன்னகைக்க, குருக்கள் மந்திரம் கூறுகிறார். இந்த வீடியோ தற்போது ரசிகர்களுக்கு மத்தியில் வைரலாகி வருகிறது.

 

CSK, MS DHONI

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்