தோனி 'இந்த' விஷயத்தில மட்டும் ஏன் பிடிவாதமா இருக்காரு?.. அடுத்த சீசன்ல கப் அடிக்கணும்னா 'இத' கண்டிப்பா செய்யணும்!.. ஜாம்பவான்கள் அறிவுரை!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2020 ஐபிஎல் தொடரில் லீக் சுற்றுடன் வெளியேறியது.
அந்த அணியின் ரசிகர்களுக்கு கடைசி போட்டியில் தோனி இன்ப அதிர்ச்சியாக தான் தொடர்ந்து அடுத்த ஆண்டும் ஐபிஎல் தொடரில் பங்கேற்க உள்ளதாக அறிவித்தார்.
ஆனால், அவரது பேட்டிங் பார்ம் எந்த அளவுக்கு உள்ளது என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த நிலையில், முன்னாள் வீரர்கள் சுனில் கவாஸ்கர், கபில் தேவ் போன்றோர் தோனி மீண்டும் ஐபிஎல் தொடரில் ஆட நினைத்தால் என்ன செய்ய வேண்டும் என அறிவுரை கூறி உள்ளனர். அவர் நேரடியாக ஐபிஎல் தொடரில் மட்டும் ஆட நினைத்தால் அவரால் ரன் குவிக்க முடியாது எனவும் கூறி உள்ளனர்.
2019 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடரின் அரை இறுதிப் போட்டி தான் தோனி கடைசியாக ஆடிய சர்வதேச கிரிக்கெட் போட்டி. அதன் பின் பல மாதங்கள் உள்ளூர் போட்டிகளில் கூட தோனி பங்கேற்கவில்லை. நேரடியாக 2020 ஐபிஎல் தொடரில் தான் தோனி பங்கேற்றார்.
2020 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை கேப்டனாக கோப்பை வெல்ல வைப்பார் என கனவு கண்டனர் ரசிகர்கள். ஆனால், சிஎஸ்கே அணி மோசமாக அடி பிளே-ஆஃப் செல்லும் வாய்ப்பை கூட இழந்தது.
இந்நிலையில், தோனி ஐபிஎல் தொடரில் இருந்தும் ஓய்வு பெறுவாரா? என்ற கேள்வி எழுந்தது. அது தொடர்பான கேள்விக்கு தோனி, நிச்சயம் இல்லை என பதில் அளித்தார்.
இதன் மூலம் அடுத்த ஆண்டும் தோனி சிஎஸ்கே அணியில் இணைந்து ஐபிஎல் தொடரில் பங்கேற்பார் என்பது உறுதியானது.
தோனியின் பேட்டிங் பார்ம் 2020 ஐபிஎல் சீசனில் மிக மோசமாக இருந்தது. அவர் மொத்தமே 200 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஒரு அரைசதம் கூட அடிக்காத தொடராக இந்த சீசன் அமைந்தது. அவர் பேட்டிங் பார்ம் இப்படி இருக்கும் போது அவர் அடுத்த சீசனில் என்ன செய்யப் போகிறார்? என்ற கேள்வி எழுந்தது.
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்கள் சுனில் கவாஸ்கர் மற்றும் கபில் தேவ் இருவரும் தோனி உள்ளூர் போட்டிகளில் ஆடி பேட்டிங் பயிற்சி பெற வேண்டும். அதன் பின்னர் 2021 ஐபிஎல் தொடரில் அவர் பங்கேற்றால் அவரால் நிச்சயம் அதிக ரன்கள் குவிக்க முடியும் என கூறினர்.
மேலும், அவர் 2019 உலகக்கோப்பை தொடருக்கு பின் உள்ளூர் போட்டிகளில் ஆடி இருந்தால் நிச்சயம் இந்த சீசனிலேயே அதிக ரன் குவித்து இருப்பார் எனவும் அவர்கள் கூறி உள்ளனர். தோனி உள்ளூர் போட்டிகளில் ஆடி பல ஆண்டுகள் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2018ஆம் ஆண்டில் தோனி பேட்டிங்கில் பார்ம் அவுட் ஆன போது அவர் உள்ளூர் போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்தன. ஆனால், அவர் அப்போது முதல் அதை செய்ய மறுத்து வருகிறார்.
தோனி பிடிவாதத்தை கைவிட்டு உள்ளூர் போட்டிகளில் ஆடினால் நிச்சயம் அவர் பேட்டிங் பார்ம் சிறப்பாக இருக்கும். அடுத்த சீசனில் சிஎஸ்கே அணியை பிளே-ஆஃப் சுற்றுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்றால் அணியை மாற்றி அமைக்க வேண்டும். அந்த பணியை செய்யவே தோனி தயாராகி வருகிறார். அணியின் முக்கிய வீரர்களை மாற்றி அமைக்க உள்ளதாக அவர் கூறி இருக்கிறார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- வாட்சன் ஓய்வு... அடிச்சு புடிச்சு நாடு திரும்பிய சிஎஸ்கே... ரிவ்யூ மீட்டிங்கில் தோனி செய்யப்போவது 'இது' தான்!?.. அப்ப... ரெய்னா, ஹர்பஜன் நெலம?.. அதிர்ச்சி தகவல்!
- ‘மக்களின் உணர்வோடு விளையாடாதீங்க’!!!... ‘கிரிக்கெட், சினிமா பிரபலங்களுக்கு’... ‘மதுரை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு...!!!
- "அவங்க ஜெயிக்க எல்லாம் நோ சான்ஸ்!... கேப்டன் 'இத' பண்ணி வேணா வின் பண்ணலாம்"... 'அடித்துக்கூறி பிரபல வீரர் நக்கல்!!!'...
- கெயிலை கடுப்பேற்றிய அந்த சம்பவம்... ஈகோவை சீண்டியதால் களத்தில் அதிரடி!.. ஓய்வு முடிவை எடுக்கும் யுனிவர்சல் பாஸ்?.. 'இது' தான் காரணம்!.. அதிர்ச்சி பின்னணி!
- 'ஆர்சிபி-யோட ப்ளஸ், மைனஸ் பத்தி...' 'ரூம்ல வச்சு டிஸ்கஷ் பண்ணினோம்...' - ஷ்ரேயாஸ் போட்ட கச்சிதமான பிளான்...!
- “இதுக்கு என்ன சொல்றீங்க?” .. மூன்றாவது அம்பயரிடம்.. வேண்டுமென்றே ஒரண்டை இழுத்த வீரர்!’.. ‘ஐபிஎல் நிர்வாகத்தின் முடிவு இதுவா?’
- Video: 5 வயசுல என் ‘அம்மாகிட்ட’ அத சொன்னேன்.. ‘3 வருஷம் நீங்க காட்டுன அன்பு..!’.. உருகிய வாட்சன்..!
- 'ஐபிஎல் போட்டிகளில்...' 'தோனியோட அந்த ஒரு ரெக்கார்ட மட்டும்...' - ஓவர்டேக் பண்ணிய தமிழக வீரர்...!
- ‘கோலி அப்பவே சுதாரிச்சுகிட்டார்!’.. ‘ஆனா மாட்டிக்கிட்ட ஐபிஎல் அணிக்கு .. இப்ப இந்த நிலை!’ .. வலுக்கும் புகார்கள்!
- 'இது மட்டும் நடந்திட்டா’...!!! 'நமக்கு சான்ஸ் கிடைக்காம’... ‘சோலி முடிஞ்சு போயிருமே கடவுளே’...!! கடைசி லீக் போட்டியில் நடக்கப் போகும் பரபரப்பு...!!!