"இன்னும் ஒரே ஒரு தடவ உங்கள அப்டி பாக்க முடியாதா??.." விருப்பப்பட்ட சிஎஸ்கே வீரர்.. தோனி சொன்ன பதில்

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

15 ஆவது ஐபிஎல் தொடர் ஆரம்பித்து இதுவரை ஐந்து லீக் போட்டிகள் முடிந்துள்ள நிலையில், போட்டிக்கு போட்டி தொடரின் மீதான விறுவிறுப்பு அதிகரித்து வருகிறது.

Advertising
>
Advertising

இந்த தொடரின் முதல் போட்டியில், நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதி இருந்தன.

இந்த போட்டியில், சென்னை அணி 131 ரன்கள் மட்டுமே எடுக்க, இலக்கை நோக்கி ஆடிய கொல்கத்தா அணி, 19 ஆவது ஓவரில் வெற்றி பெற்று அசத்தி இருந்தது.

தனியாளாக போராடிய தோனி

சென்னை அணியை பொறுத்தவரையில், தோனி 50 ரன்கள் அடிக்க, மற்ற வீரர்கள் கடுமையாக சொதப்பி இருந்தனர். முன்னதாக, ஐபிஎல் போட்டிகள் ஆரம்பிக்க சரியாக இரண்டு நாட்கள் இருக்கும் போது, சென்னை அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக தோனி திடீரென அறிவித்திருந்தது, ரசிகர்கள் மத்தியில் கடும் வேதனையையும், அதிர்ச்சியினையும் ஏற்படுத்தி இருந்தது.

ஆவலில் ரசிகர்கள்

மேலும், இந்த சீசனில் தோனியை கேப்டனாக பார்க்க போகிறோம் என எதிர்பார்ப்புடன் இருந்த ரசிகர்களுக்கும் ஏமாற்றமே மிஞ்சி இருந்தது. இதனைத் தொடர்ந்து, அறிமுக போட்டியில் அரைச் சதமடித்தும் அசத்தலான ஆரம்பத்தை அளித்துள்ளார் தோனி. கடந்த இரண்டு ஐபிஎல் சீசன்களில், பேட்டிங்கில் தடுமாற்றம் கண்டு வந்த தோனி, இந்த முறை நல்ல முறையில் தொடங்கி உள்ளதால், அடுத்தடுத்து போட்டிகளில் அவரது பேட்டிங்கைக் காணும் ஆவலும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

வெற்றிக் கணக்கைத் தொடங்க முனைப்பு

சென்னை அணி தங்களின் அடுத்த லீக் போட்டியில், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியை நாளை (30.03.2022) எதிர்கொள்ளவுள்ளது. மேலும், முதல் போட்டியில் களமிறங்காத சென்னை அணியின் நட்சத்திர வீரர் மொயீன் அலி, நாளைய போட்டியில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்டுகிறது. லக்னோ மற்றும் சென்னை ஆகிய இரு அணிகளும் முதல் போட்டியில் தோல்வி அடைந்துள்ளதால், தங்களின் வெற்றிக் கணக்கை தொடங்க இரு அணிகளும் நாளை முனைப்பு காட்டும் என தெரிகிறது.

ஆசைப்பட்ட கான்வே

இந்நிலையில், சென்னை அணியில் இந்தாண்டு இணைந்திருக்கும் நியூசிலாந்து வீரர் டெவான் கான்வே, தோனியிடம் உரையாடியது பற்றி சுவாரஸ்ய தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். "நான் தோனியின் தலைமையில் ஆட வேண்டி தான் விருப்பமாக இருந்தேன். இது பற்றி, அவரிடம் சிறிய உரையாடல் ஒன்றை நான் நடத்தினேன். அப்போது, அவரிடம், 'இன்னும் ஒரு சீசனில் நீங்கள் கேப்டனாக நீடிக்கவில்லை என்பதில் உறுதியாக இருக்கிறீர்களா?. ஏனென்றால், உங்களது தலைமையில் ஒரு சீசனில் நான் விளையாட விரும்புகிறேன்" என கேட்டேன்.

இதற்கு தோனியோ, 'இல்லை, வேண்டாம். ஆனால், நான் இங்கு தானே இருக்க போகிறேன்' என என்னிடம் பதிலளித்தார்' என கான்வே தெரிவித்துள்ளார். கடந்த சீசனில் சென்னை அணியின் தொடக்க வீரராக இருந்த டு பிளஸ்ஸிக்கு மாற்று வீரராக, கான்வேவை சென்னை அணி ஏலத்தில் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

MSDHONI, CHENNAI-SUPER-KINGS, CSK, IPL 2022, DEVON CONWAY, CSK VS LSG

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்