ஏகப்பட்ட விமர்சனம்.. ஸ்டைலாக பதில் சொன்ன சிஎஸ்கே.. "தோனியோட பிளானிங்கே புரியலையே"
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் மெகா ஏலம், இன்னும் ஒரு நாள் மீதம் இருக்கும் நிலையில், பல அணிகளும் புத்தம் பொலிவுடன் சில வீரர்களை எடுத்துள்ளது.
நேற்றைய ஒரு நாள் முடிவில், அதிக தொகைக்கு இளம் வீரர் இஷான் கிஷான் ஏலம் போனார். 15.25 கோடி ரூபாய்க்கு அவரை மீண்டும், மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுத்திருந்தது.
இவரைத் தொடர்ந்து, அதிக பட்ச தொகையாக, தீபக் சாஹரை, 14 கோடி ரூபாய்க்கு சென்னை சூப்பர் கிங்ஸ் ஏலத்தில் எடுத்திருந்தது. இது போல, பல வீரர்களும் எதிர்பாராத தொகைக்கு ஏலம் போயினர்.
நேற்றைய ஒரு நாள் ஏலம் முடிவு பற்றி, அனைத்து அணிகளின் ரசிகர்களும் பல விதமான கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். பல கிரிக்கெட் நிபுணர்களும் ஒவ்வொரு அணிகளும் எடுத்துள்ள வீரர்கள் குறித்து, ஆராய்ந்து கருத்தினை தெரிவித்தும் வருகின்றனர்.
சிஎஸ்கே
இந்நிலையில், முதல் நாள் ஏல முடிவில், அதிக கவனத்தை பெற்றுள்ள அணி என்றால், அது தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் தான். நேற்றைய தினத்தில், மொத்தம் 6 வீரர்களை சிஎஸ்கே எடுத்திருந்தது. இதில், 5 பேர் சிஎஸ்கே அணியில் ஏற்கனவே இடம்பெற்றிருந்த வீரர்கள் என்பது தான் சிறப்பம்சமே.
ரசிகர்கள் கருத்து
பிராவோ, அம்பத்தி ராயுடு, உத்தப்பா, ஆசிப், தீபக் சாஹர் மற்றும் துஷார் தேஷ்பாண்டே ஆகிய வீரர்களை எடுத்துள்ளது. இதில், துஷாரைத் தவிர மற்ற அனைத்து வீரர்களும், கடந்த சீசனில் சிஎஸ்கே அணியில் இடம்பெற்றிருந்த வீரர்கள் தான்.
அது மட்டுமில்லாமல், இதில் பலரும் 35 வயதுக்கு அதிகமான சீனியர் வீரர்கள். இன்னொரு பக்கம், இத்தனை சீனியர் வீரர்களை எடுத்த சிஎஸ்கே, டு பிளஸ்ஸிஸை எடுக்க முயற்சிகள் மேற்கொள்ளவில்லை. இது பற்றியும், ரசிகர்கள் பலரும் பல விமர்சனங்களை செய்து வருகின்றனர்.
தோனி பிளான்
புத்தம் புதிய அணியாக, சிஎஸ்கே உருவாகும் என காத்திருந்த ரசிகர்களுக்கு, சற்று ஏமாற்றமே மிஞ்சியிருந்தது. ஆனாலும், கோப்பையைக் கைப்பற்றிய அணியை மீண்டும் கட்டமைத்து, கோப்பையைத் தட்டிச் செல்ல தோனி திட்டமிட்டிருக்கலாம் என்றும் தெரிவித்து வருகின்றனர். அதிக விமர்சனங்களை சிஎஸ்கே அணியின் முடிவு சந்தித்தாலும், தொடர்ந்து பலரும் ஆதரவு அளித்து வருகின்றனர்.
சென்னை 28
இந்நிலையில், நேற்றைய ஏல முடிவு குறித்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான சென்னை 28 படத்தின் இரண்டாம் பாகத்தில், முதல் பாகத்தில் வரும் நடிகர்கள் வயதாகி, மீண்டும் கிரிக்கெட் ஆடுவதற்காக ஒன்றிணைவார்கள்.
வைரலாகும் பதிவு
அதனைக் குறிப்பிட்டு, ட்வீட் செய்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ், 'திரும்பி வரோம்ன்னு சொல்லு' என குறிப்பிட்டு, சென்னை 600005 Reunion என குறிப்பிட்டுள்ளது.
தங்களின் அணி பற்றி எந்த விதமான கருத்து நிலவினாலும், அதனை ஸ்போர்ட்டிவ் ஆக எடுத்து, அதிக பலத்துடன் விளங்கும் சிஎஸ்கே அணியின் ட்வீட், தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- IPL MEGA AUCTION: குட்டி AB டிவில்லியர்சை ஏலத்தில் எடுத்த மும்பை இந்தியன்ஸ்! எத்தனை கோடிக்கு தெரியுமா?
- சிஎஸ்கே அட்மினுக்கே தெரியுது.. அந்த பையனை எடுக்காம விட்டதெல்லாம் கொஞ்சம் ஓவர்தான்.. தமிழ்நாடு வெதர்மேன் அதிருப்தி..!
- சிஎஸ்கே ப்ளேயர்ஸா பார்த்து ‘குறி’ வைக்கும் ஆர்சிபி.. முதல்ல டு பிளசிஸ்.. இப்போ இவரையும் தூக்கிட்டாங்களே..!
- தோனியின் ஆசையில் மண் அள்ளி போட்ட IPL அணி... CSK வளர்த்த பையனை கொத்தாக தூக்கிட்டாங்க! சோகத்தில் சென்னை ரசிகர்கள்
- 'சிஎஸ்கே'வில் இருந்து 'ஆர்சிபி'க்கு போன டு பிளஸ்ஸிஸ்.. "அதே நாள்'லயா இப்டி ஒரு விஷயம் நடக்கணும்.." மீண்டும் மனம் உடைந்த சிஎஸ்கே ரசிகர்கள்
- தமிழக வீரரின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்ற போராடிய சிஎஸ்கே.. ஆனா கடைசி வர ‘டஃப்’ கொடுத்து அந்த டீம் தட்டிட்டு போயிடுச்சு..!
- போன ஐபிஎல் சீசனில் வைரலான வீரரை.. கட்டம் கட்டி தூக்கிய 'சிஎஸ்கே'.. செம 'குஷி'யில் ரசிகர்கள்
- இளம் வீரரை எடுத்ததும் கைதட்டி கொண்டாடிய மும்பை அணி.. அதுவும் 15.25 கோடிக்கு எடுத்துருக்காங்க.. யாருப்பா அந்த பையன்
- மும்பை வீரருக்கு கொக்கி போட்ட சிஎஸ்கே.. "கடைசி'ல என்னய்யா இவ்ளோ ட்விஸ்ட் வைக்குறீங்க??"
- IPL AUCTION 2022- ஐபிஎல் ஏலம்: எங்களுக்கு அவர் தான் வேணும்... ஏலத்தில் அடம் பிடித்த CSK! போட்டி போட்ட SRH... ஆனால் கடைசில நடந்த சம்பவம்!