தொடர் தோல்விக்கு காரணமே ‘இது’ தான்.. இப்டியே போச்சுனா ‘ப்ளே ஆஃப்’ போறதெல்லாம் ரொம்ப கஷ்டம்.. என்ன ‘நீங்களே’ இப்டி சொல்லிட்டீங்க..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசென்னை அணியின் தொடர் தோல்விகளுக்கான காரணம் குறித்து பயிற்சியாளர் பிளமிங் விளக்கியுள்ளார்.
ஐபிஎல் 2020 தொடரில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. இதுவரை விளையாடிய 7 போட்டிகளில் 2-ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதனால் மீதமுள்ள 7 போட்டிகளில் 6 போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே ப்ளே ஆஃப் செல்லும் நிலைக்கு சென்னை அணி தள்ளப்பட்டுள்ளது.
இந்தநிலையில் சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீவன் பிளமிங் சிஎஸ்கே-வின் தொடர் தோல்விக்கான காரணம் குறித்து பேசியுள்ளார். அதில், ‘சிஎஸ்கே அணியில் ஓப்பனிங் சரியாக இல்லையென்றால் அடுத்தடுத்த வீரர்களும் அவுட்டாகி விடுகின்றனர். ஓப்பனிங் சொதப்பினால் மொத்தமாக அணியே காலியாகி விடுகிறது. இதற்கு தீர்வு காண வேண்டும்.
மிடில் ஓவர்களில் கொஞ்சம் சிறப்பாக ஆட வேண்டும். இதுதான் தற்போது முக்கியம். சிஎஸ்கே அணிக்கு நிறைய பேட்டிங் ஆப்ஷன் உள்ளது. தொடக்கத்தை நன்றாக அமைக்கிறோம். ஆனால் மிடில் ஆர்டர் பேட்டிங் மிக மோசமாக இருப்பதால் டென்சன் அதிகரிக்கிறது. இதனால் அதிரடியாக ஆடக்கூடிய வீரர்கள் பாதி போட்டிக்கு பின் இறங்க வேண்டும். அவர்கள் கடைசியில் அதிரடியாக ஆட வேண்டும். இப்போதைக்கு இதுதான் தீர்வு.
தற்போதைய ஆட்டம் போல நாங்கள் தொடர்ந்து விளையாடினால் ப்ளே ஆஃப் போவது கஷ்டம்தான். அணியில் தோல்விக்கு சில காரணங்கள் இருக்கிறது. அதில் முக்கியமானது அணியில் இருக்கும் வீரர்களின் வயதுதான் காரணம். வீரர்களுக்கு வயதாகிவிட்டதால் தோல்விக்கு இதுவும் ஒரு காரணமாக அமைகிறது. இதனால் கடைசில் அவர்கள் அதிரடியாக ஆடுவது இல்லை.
சிஎஸ்கே அணியில் எப்போதும் ஸ்பின் பவுலர்கள்தான் நன்றாக விளையாடுவார்கள். இந்த முறை ஸ்பின் பவுலர்கள் சிறப்பாக பந்து வீசினாலும், போதிய விக்கெட்டுகளை எடுக்கவில்லை. நாங்கள் ஆடும் முறையை மாற்ற வேண்டும். நாங்கள் ஒரே வீரர்களை வைத்து விளையாடி வருகிறோம். தேர்வு முறையில் மாற்றங்கள் செய்யவில்லை. இனி கொஞ்சம் கொஞ்சமாக முடிவுகள் எல்லாம் மாறப்போகிறது. எல்லா போட்டியில் நாங்கள் சேஷிங் செய்வதும் தோல்விக்கு ஒரு வகையில் காரணமாக உள்ளது. சேஷிங் செய்வதில் சில விஷயங்களை மாற்ற வேண்டும்’ என பிளமிங் பேசியுள்ளார்.
ஏற்கனவே சென்னை அணியில் வயதான வீரர்கள் அதிகமாக விளையாடுகின்றனர் என விமர்சனங்கள் உள்ள நிலையில், சென்னை அணியின் தோல்விக்கு அவர்களும் ஒரு காரணம் என பயிற்சியாளர் பிளமிங் சொல்லியிருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது. இந்தநிலையில் சென்னை அணி நாளை (13.10.2020) ஹைதராபாத்துடன் மோதுகிறது. ஏற்கனவே அந்த அணியுடன் தோல்வியை தழுவியுள்ள நிலையில், இந்த போட்டியில் வெற்றி பெறும் முனைப்புடன் சென்னை அணி விளையாடும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘கோபம் தலைக்கேறிய ராகுல் திவேதியா!’.. ‘களத்துக்கு வந்த வார்னர்!’.. ‘அப்படி என்ன சொன்னார் கலீல்?’.. ‘சூட்டை கிளப்பிய சம்பவம்!’.. இறுதியில் மனம் திறந்த ராகுல்!
- 'சிஎஸ்கே பிளே ஆப் செல்ல'... 'இது ஒன்னுதான் வழி!'... - 'மீண்டும் 'அதே' Magic-ஐ அரங்கேற்றி... சாதிப்பாங்களா சென்னை டீம்???'
- "தூக்கி போடுங்க அந்த மாடல...!" - உணர்ச்சிவசப்பட்ட தோனி!! - 'புதிய பிளானுடன் களமிறங்கும் CSK'...! 'வெறித்தன வெயிட்டிங்கில் ரசிகர்கள்!!!'
- "நீ எவ்ளோ பெரிய ஆளா வேணா இரு... எனக்கு கவலையில்ல, ஆனா..." - தோல்விக்குப் பின் CSK-வின் நட்சத்திர வீரரை... 'கிழித்து தொங்கவிட்ட' பிரபல வீரர்!!!
- ‘ஆரோன் பின்ச்சை’ தொடரும் ‘மான்கட்’ பரிதாபங்கள்!.. ‘அஸ்வின்’ எச்சரித்ததை தொடர்ந்து ‘அடுத்த’ சம்பவத்தை நடத்திய சிஎஸ்கே ‘வீரர்’! வீடியோ!
- கிரிக்கெட்டில் அறிமுகமாகும் உலகின் உயரமான பவுலர்...! - 'அந்த' நாட்டுக்காக தான் விளையாட உள்ளார்...!
- “சிஎஸ்கே அணிக்கு இப்ப புரிஞ்சுருக்கும்!”.. “ப்ளீஸ்.. யாராச்சும் அந்த மனுசன திரும்ப அழைச்சுட்டு வாங்க!”.. கதறும் ரசிகர்கள்!
- ஐபிஎல்: “அவரோட பந்துவீச்சுலதான் சந்தேகமா இருக்கு!”.. சுழற்பந்துவீச்சாளர் மீது நடுவர்கள் ‘பரபரப்பு’ புகார்!
- மேட்ச்ல ‘ஹைலைட்டே’ இந்த இடம்தான்.. ‘தல’ தோனியா?.. ‘கிங்’ கோலியா?.. பரபரக்க வைத்த நொடிகள்..!
- பாவங்க மனுஷன் ‘நொறுங்கி’ போய்ட்டாரு.. தோல்விக்கு பின் வந்த வீரரின் ‘சோக’ ட்வீட்..!