"எப்பதான் அந்த பையனுக்கு சான்ஸ் குடுப்பீங்க??.." Waiting-ல் இருந்த CSK ரசிகர்கள்.. பிளமிங் சொன்ன வைரல் பதில் என்ன?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

2021 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில், நான்காவது முறையாக கோப்பையைக் கைப்பற்றி அசத்தி இருந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்.

Advertising
>
Advertising

Also Read | First Half போட்டியில் டாப் கியர்.. Second Half'ல ரிவர்ஸ் கியர்.. "RCB-யின் பின்னடைவுக்கு காரணங்கள் இதுவா??..

ஆனால், நடப்பு தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பே, சிஎஸ்கே அணிக்கு சற்று இக்கட்டான சூழலில் உள்ளது.

முதல் நான்கு போட்டிகளில் தொடர்ந்து தோல்விகளை சந்தித்த சிஎஸ்கே, பெங்களூர் அணிக்கு எதிராக நடைபெற்ற ஐந்தாவது லீக் போட்டியில், முதல் வெற்றியை பதிவு செய்தது.

எல்லா மேட்ச்சும் ஜெயிக்கணும்..

இதன் பின்னர் மீண்டும் தோல்வி பாதைக்கு திரும்பிய சிஎஸ்கே, தோனியின் ஆட்டத்தால் மும்பை அணிக்கு எதிராக வெற்றி கண்டிருந்தது. இதன் பின்னர், மீண்டும் பஞ்சாப் அணிக்கு எதிராக தோல்வி அடைந்தது சிஎஸ்கே. மொத்தம் இதுவரை ஆடியுள்ள 8 போட்டிகளில், இரண்டில் மட்டுமே வெற்றி கண்டுள்ள சிஎஸ்கே, மீதமுள்ள 6 லீக் போட்டிகளில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

எப்போ அவருக்கு சான்ஸ் கிடைக்கும்??

இதனிடையே, இளம் வீரர் ஒருவருக்கு சென்னை அணியில் இதுவரை வாய்ப்பு கிடைக்காதது பற்றியும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். முகேஷ் சவுத்ரி, ப்ரெட்டொரியஸ் உள்ளிட்ட பலருக்கு, சிஎஸ்கேவில் அடுத்தடுத்து வாய்ப்புகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், U 19 உலக கோப்பையில் கலக்கிய இந்திய இளம் வீரர் ராஜ்வர்தன் ஹங்கர்கேக்கருக்கு சிஎஸ்கே அணியில் ஆடும் வாய்ப்பு இதுவரை கிடைக்கவில்லை. ஐபிஎல் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பாக, ராஜ்வரதன் பயிற்சியில் ஈடுபடும் வீடியோக்களை சிஎஸ்கே அணி அதிகம் பதிவிட்டு வந்தது.

ஸ்டீபன் பிளமிங் சொன்ன 'காரணம்'

பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் கலக்கும் அவருக்கு, நிச்சயம் சிஎஸ்கே அணி வாய்ப்பு வழங்கும் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், 8 போட்டிகளிலும் ராஜ்வர்தன் களமிறங்கவில்லை. அவரை களமிறக்க வேண்டும் என ரசிகர்கள் தொடர்ந்து சிஎஸ்கேவுக்கு கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில், ராஜ்வர்தனை இதுவரை களமிறக்காமல் இருப்பதற்கான காரணம் என்ன என்பது பற்றி, சிஎஸ்கேவின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் கருத்து தெரிவித்துள்ளார்.

"U 19 போட்டிகளில் ராஜ்வர்தன் சிறப்பாக செயல்பட்டார் என்பது எனக்கு தெரியும். ஆனால், ஐபிஎல் தொடர்  அதை விட சற்று கடுமையானது. இதனால், மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அப்படி இருக்கையில், அவரை முதலிலேயே ஆட விட்டு, அவருடைய நம்பிக்கையை கெடுக்க நாங்கள் விரும்பவில்லை. அவர் பெற்றுள்ள திறனை நாங்கள் உணர்ந்து கொள்ள விரும்புகிறோம். எங்களுடன் அவர் சிறந்த முறையில் செயல்பட்டு வருகிறார்.

அவர் ஏற்கனவே சில பெரிய போட்டிகளை ஆடி விட்டார். அணியில் அவருக்கான தேவை ஏற்பட்டால், இந்த சீசனிலேயே அவரை களமிறக்குவோம். பந்தினை நல்ல வேகத்துடன் ராஜ்வர்தன் வீசுகிறார். ஆனால், போட்டியின் போது அந்த வேகத்தினை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதைக் கற்றுக் கொள்வது தான் மிக முக்கியம். ராஜ்வர்தனை போன்று ஒரு திறமைசாலியை வைத்து குழப்பத்தை உருவாக்க நாங்கள் விரும்பவில்லை" என ஸ்டீபன் பிளமிங் தெரிவித்துள்ளார்.

சென்னை அணி தங்களின் அடுத்த போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வரும் மே 1 ஆம் தேதியன்று சந்திக்கவுள்ளது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

CRICKET, CSK, CSK COACH, CSK COACH STEPHEN FLEMING, RAJVARDHAN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்