ஏங்க 'அவரு' ஃபார்ம் அவுட்லாம் ஆகலங்க...! 'அன்னைக்கு அங்க என்ன நடந்துச்சுன்னா...' - சிஸ்கே வீரர் குறித்து பிளெமிங் கருத்து...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

14-வது ஐபிஎல் சீசனில் இதுவரை 29 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளது. இந்தமுறை டெல்லி கேப்பிடல்ஸ் அணி 8 போட்டிகளில் 6 வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கிறது. இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் தலா பத்து புள்ளிகள் பெற்று இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளது.

இந்த நிலையில், மே 1-ம் தேதி நடைபெற்ற 27-வது லீக் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் பலப்பபரீட்சை நடத்தியது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் பவுலிங் வீசுவது என தீர்மானித்தார். அதன்படி முதலில் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அம்பத்தி ராயுடு (72), மொயின் அலி (58) மற்றும் டூ பிளெசிஸ் (50) என சிஎஸ்கே ருத்ரதாண்டவம் ஆடியது. அதிரடி ஆட்டத்தினால் இருபது ஓவர்கள் முடிவில் மொத்தம் 218 ரன்கள் குவித்தனர்.

இதனையடுத்து இந்த இமாலய இலக்கை எட்டிப்பிடிக்க வீறுக்கொண்டு களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியில் பொல்லார்டு (87), டீகாக் (38), ரோகித் (35) மற்றும் குர்னால் (32) என பேட்டையும் பந்தையும் கிழித்து தொங்கவிட்டனர். இதன்மூலம் 219 ரன்கள் அடித்து நான்கு விக்கெட் வித்தியாசத்தில் அதிரடி வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் சிஎஸ்கே வீரர்கள் ரவிந்திர ஜடேஜா மற்றும் ராயுடு பார்ட்னர்ஷிப்பில் பின்னி பெடலெடுத்தனர். இந்த போட்டியில் வேற லெவலில் பிரமாதமாக பட்டைய கிளப்பிக் கொண்டிருந்த ராயுடுவுக்கு ஜடேஜா தொடர்ந்து ஸ்ட்ரைக்கை மாற்றி வழங்கினார். இதனால் ஜடேஜா ராட்சஸ ஷாட்கள் எதுவும் விளையாடவில்லை. 22 பந்துகளை எதிர்கொண்ட ஜடேஜா 22 ரன்கள் மட்டும் அடித்தார்.

இது குறித்து சென்னை அணியின் கோச் பிளெமிங் தெரிவிக்கையில், “ஜடேஜா கண்டிப்பாக ஃபார்ம் இழக்கவில்லை. எதிர்முனையில் ராயுடு ரன்களை குவித்து வந்தார். சில நேரங்களில் ஒரு பேட்ஸ்மன் நம்பமுடியாத அளவிற்கு ரன்களை குவித்து வருவார்.

இதனால் மற்றொரு பேட்ஸ்மன் ஸ்ட்ரைக்கை மாற்றி தருவார். அது தான் நடந்ததே தவிர மற்றபடி எதுவும் இல்லை என பிளெமிங் கருத்து தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்