ஓ.. இதுதான் காரணமா..? அம்பட்டி ராயுடு டுவீட் விவகாரம்.. மௌனம் களைத்த CSK கோச்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசிஎஸ்கே அணியின் பேட்ஸ்மேன் அம்பட்டி ராயுடு டுவீட் சர்ச்சைக்கு குறித்து பயிற்சியாளர் ஸ்டீவன் ப்ளெமிங் விளக்கம் கொடுத்துள்ளார்.
Also Read | தந்தையின் புத்தக டைட்டிலில் மகன் உதயநிதி நடித்த படத்தை பார்த்த முதல்வர் மு.க.ஸ்டாலின்.. வைரல் ஃபோட்டோஸ்..!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் அம்பட்டி ராயுடு இந்த ஆண்டு ஐபிஎல் தொடருடன் ஓய்வு பெறப்போவதாக சில தினங்களுக்கு முன்பு தேதி டுவிட்டரில் பதிவிட்டு உடனே நீக்கினார். இது சென்னை அணியின் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து விளக்கமளித்த சிஎஸ்கே அணியின் சிஇஓ காசிவிஸ்வநாதன், ‘ராயுடு கடந்த சில போட்டிகளில் சரியாக விளையாடாததால் மன உளைச்சலில் இருந்தார். அதனால் அப்படி டுவீட் செய்து பின் நீக்கிவிட்டார். அவர் தொடர்ந்து அணியில் இடம்பெறுவார்’ என கூறினார்.
இந்த சூழலில் நேற்று குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் ,கிங்ஸ் அணி விளையாடியது. ஆனால் அப்போட்டியில் அம்பட்டி ராயுடு இடம்பெறவில்லை. மேலும் அந்த போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி தோல்வியடைந்தது.
இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து சென்னை அணி தலைமை பயிற்சியாளர் ஸ்டீவன் ப்ளெமிங் விளக்கம் அளித்துள்ளார். அதில், ‘கடந்த சில நாட்களாக தனிப்பட்ட காரணங்களுக்காக ராயுடு மன உளைச்சலில் இருந்தார். இப்போது அவர் சரியாகிவிட்டார். அவர் அணியில் தொடர்ந்து இடம் பெறுவார். எங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை’ என ஸ்டீவன் ப்ளெமிங் தெரிவித்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் ஆட்டம் ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. இதுவரை விளையாடிய 13 போட்டிகளில் 4-ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அதனால் புள்ளிப் பட்டியலில் 9-வது இடத்தில் இருந்து வருகிறது. இதன்மூலம் ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பையும் சென்னை அணி தவறவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "ராயுடுவுக்கு இது கடைசி ஐபிஎல் சீசனா??.." குழம்பி போன ரசிகர்கள்.. "அவரோட முடிவு இதுதான்.." சிஎஸ்கே சிஇஓ கொடுத்த விளக்கம்.. வெளியான தகவல்
- “என்ன 97-க்கே ஆல் அவுட் ஆகிட்டீங்க”.. ரெய்னாவை கலாய்த்த யுவராஜ்.. அதுக்கு அவர் என்ன சொன்னார் தெரியுமா?
- "அது அவ்ளோ தான்.. முடிஞ்சு போச்சு.." ஜடேஜா - சிஎஸ்கே பத்தி முன்னாள் வீரர் சொன்ன பரபரப்பு கருத்து..
- காயத்தால் விலகிய ஜடேஜா.. "அவர மாதிரி ஒருத்தரு.." ஆல் ரவுண்டர் பற்றி தோனி சொன்ன வார்த்தைகள்
- "இது எல்லாம் கொஞ்சம் கூட நியாயம் இல்லங்க.." கொதித்த சிஎஸ்கே ரசிகர்கள்.. முதல் ஓவரிலேயே நடந்த 'சர்ச்சை'..
- “இதே தான் ரெய்னாவுக்கும் நடந்தது”.. அப்டின்னா அடுத்த வருஷம் ஜடேஜா CSK-ல இருக்க மாட்டாரா..? முன்னாள் வீரர் பரபரப்பு கருத்து..!
- Instagram-ல் ஜடேஜாவை அன்ஃபாலோ செய்ததா CSK? திடீரென வெடித்த புது சர்ச்சை.. CEO கொடுத்த விளக்கம் என்ன..?
- "அன்னைக்கி 117 கிலோ இருந்தேன்.. ஆனா, இன்னைக்கி சீனே வேற".. CSK இளம் வீரரின் 'Motivational' குட்டி ஸ்டோரி
- '2' வருஷமா வாய்ப்பு கொடுக்காத 'CSK' .. வந்ததும் குஜராத் அணி கொடுத்த சான்ஸ்.. தமிழக வீரரை வாழ்த்தும் ரசிகர்கள்
- பேட்டிங் பண்றதுக்கு முன்னாடி தோனி சொன்ன ‘ஒரு’ அட்வைஸ்.. ‘ஆட்டநாயகன்’ விருது வாங்கிய CSK வீரர் சொன்ன சீக்ரெட்..!