CSK-வில் பென் ஸ்டோக்ஸ்.. "இது தோனி போட்ட ஸ்கெட்சசா?".. சீக்ரெட் உடைத்த CSK சிஇஓ!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் மிகவும் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது.

Advertising
>
Advertising

2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் ஆகிய இரண்டு அணிகள் புதிதாக சேர்க்கப்பட்டிருந்தது. இதில், ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி, அறிமுக தொடரிலேயே ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி அசத்தி இருந்தது.

இதனைத் தொடர்ந்து, ஐபிஎல் மினி ஏலம் குறித்த தகவல் வெளியாகி இருந்த நிலையில், அனைத்து அணிகளுமே தங்கள் தக்க வைத்துக் கொண்ட வீரர்கள் மற்றும் விடுவித்த வீரர்கள் பட்டியலை வெளியிட்டிருந்தது. இதற்கடுத்து, கேரள மாநிலம் கொச்சியில் மினி ஏலம் தற்போது நடைபெற்றது.

இந்த மினி ஏலத்தில் ஏராளமான வீரர்கள் அதிக தொகைக்கு ஏலம் போனது பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. இதில், சாம் குர்ரான் 18.50 கோடி ரூபாய்க்கு ஏலம் போயுள்ளார். இது ஒட்டுமொத்த ஐபிஎல் ஏல வரலாற்றில் ஒரு வீரருக்கான அதிக தொகையாகவும் பார்க்கப்படுகிறது.

இதற்கு அடுத்தபடியாக, கேமரூன் க்ரீனை மும்பை இந்தியன்ஸ் அணி, 17.50 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது அதிகபட்சமாக உள்ளது. மேலும் மும்பை அணி அதிக தொகைக்கு ஏலத்தில் எடுத்த வீரராகவும் மாறி உள்ளார் கேமரூன் க்ரீன் மாறி உள்ளார். இதற்கு அடுத்தபடியாக, ஐபிஎல் மினி ஏலத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இங்கிலாந்து ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 16.25 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

மிக முக்கியமான வீரர் சென்னை அணியில் இணைந்துள்ளதால் சிஎஸ்கே ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். முன்னதாக, ஐபிஎல் தொடரில் தோனியுடன் இணைந்து புனே அணியில் ஆடி இருந்தார் பென் ஸ்டோக்ஸ். அதன் பின்னர், தற்போது மீண்டும் தோனியுடன் இணைந்து சென்னை அணியில் பென் ஸ்டோக்ஸ் ஆட உள்ளது குறிப்பிடத்தக்கது.

2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ஸ்டோக்ஸ் பெரிய அளவில் பங்கு வகிப்பார்  என்றும் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்த நிலையில், பென் ஸ்டோக்ஸை ஏலத்தில் எடுக்க தோனி மெசேஜ் அனுப்பினாரா என்ற கேள்விக்கு சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் தற்போது பதில் அளித்துள்ளார்.

இது பற்றி பேசிய அவர், "ஸ்டோக்ஸை அணியில் எடுக்க வேண்டும் என்பது பற்றி தோனி எந்த மெசேஜும் அனுப்பவில்லை. முன்னதாக அணி நிர்வாகமே ஏலத்தில் வரும் போது பெரிய ஆல் ரவுண்டரை குறிவைத்து தான் வந்தது. பென் ஸ்டோக்ஸை 16.25 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்ததில் மகிழ்ச்சி அடைகிறோம்" என கூறி உள்ளார்.

பென் ஸ்டோக்ஸை எடுப்பதற்கு முன்பாக, மற்றொரு இங்கிலாந்து ஆல் ரவுண்டர் சாம் குர்ரானை எடுக்க 15 கோடி ரூபாய் வரைக்கும் சிஎஸ்கே ஏலத்தில் சென்று இறுதியில் பின் வாங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

MSDHONI, CHENNAI-SUPER-KINGS, CSK, KASI VISWANATHAN, IPL AUCTION, BEN STOKES

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்