“டீம் கிட்ட ப்ளேயர்ஸ் லிஸ்ட் அனுப்பிட்டோம்”.. தீபக் சஹாருக்கு மாற்றுவீரர் யார்?.. CSK சிஇஓ முக்கிய அப்டேட்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

தீபக் சஹாருக்கு மாற்று வீரரை தேர்வு செய்வது குறித்து சிஎஸ்கே அணியின் சிஇஒ காசி விஸ்வநாதன் முக்கிய தகவலை தெரிவித்துள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | “அப்பவே சொன்னேன்.. இப்படி ஏதாவது நடக்கும்னு”.. ஹர்திக் பாண்ட்வை முன்னாடியே எச்சரித்த பாகிஸ்தான் வீரர்..!

நடப்பு ஐபிஎல் சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மோசமானதாக தொடராக அமைந்துள்ளது. இதுவரை விளையாடியுள்ள 6 போட்டிகளில் 5 தோல்விகளை பெற்று புள்ளிப்பட்டியலில் 9-வது இடத்தில் இருந்து வருகிறது. சென்னை அணியின் தொடர் தோல்விக்கு பவுலிங், ஃபீல்டிங் மற்றும் பேட்டிங் என மூன்றுமே சொதப்பி வருவதுதான் காரணம் என பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

குறிப்பாக பவர் ப்ளே மற்றும் டெத் ஓவர்களில் விக்கெட்டுகளை கைப்பற்ற சரியான பவுலிங் காம்பினேஷன் இல்லை. முன்னதாக இந்த பொறுப்பை சிறப்பா செய்து வந்த தீபக் சஹார் காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் விளையாடவில்லை. இந்த மாத இறுதிக்குள் அணிக்கு திரும்பிவிடுவார் என நம்பப்பட்டது. ஆனால் அவருக்கு 2-வதாக முதுகிலும் காயம் ஏற்பட்டது. இதனை அடுத்து அடுத்த 4 மாதங்களுக்கு அவர் ஓய்வெடுக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

அதனால் அவருக்கு மாற்று வீரரை தேட வேண்டிய சூழலுக்கு சிஎஸ்கே நிர்வாகம் தள்ளப்பட்டது. அதன்படி இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மாவை எடுப்பதாக உள்ளதாக சொல்லப்பட்டது . மும்பை மைதானங்களில் டெஸ்ட் பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். அதனால் இவரை எடுக்க சிஎஸ்கே முயற்சி செய்யும் என நெட்டிசன்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் இதுகுறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் விளக்கம் கொடுத்துள்ளார். அதில், ‘தீபக் சஹார் விஷயத்தில் நாங்கள் எந்தவித தலையீடும் செய்யவில்லை. மாற்று வீரர்களை தேர்வு செய்து அணி குழுவிடம் அனுப்பியுள்ளோம். அவர்கள் இதுவரை எவ்வித பதிலும் தெரிவிக்கவில்லை. தீபக் சஹாருக்கு மாற்றாக இந்திய பவுலர் யாரையும் தேர்வு செய்யவில்லை’ என காசி விஸ்வநாதன் கூறியுள்ளார். இதன்மூலம் இஷாந்த் ஷர்மாவை சிஎஸ்கே அணி எடுக்க வாய்ப்பில்லை என தெரிகிறது.

Also Read | “அஸ்வின், சஹால் ஓவரை அவர் நல்லா அடிப்பார்”.. ஸ்கெட்ச் போட்டு விளையாடியும் மிஸ்ஸான வெற்றி.. KKR கோச் ஆதங்கம்..!

CRICKET, CSK, CSK CEO, DEEPAK CHAHAR, CSK CEO KASI VISWANATHAN, IPL 2022

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்