‘இன்னும் ஒரு வாரத்துல தெரிஞ்சிடும்’!.. தோனிக்கு அப்புறம் சிஎஸ்கே தக்க வைக்கப்போற வீரர் ‘இவர்’ தானா..? சிஇஓ ‘சூசகமாக’ சொன்ன பதில்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

தோனியை அடுத்து சிஎஸ்கே அணி தக்க வைக்க உள்ள வீரர் குறித்து அந்த அணியின் சிஇஓ சூசகமாக பதிலளித்துள்ளார்.

Advertising
>
Advertising

ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த ஆண்டு நடந்த 14-வது சீசன் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது. இதுவரை 8 அணிகள் இடம்பெற்றிருந்த நிலையில், அடுத்த ஆண்டு முதல் 2 புதிய அணிகள் இணைய உள்ளதாக பிசிசிஐ அறிவித்தது. அதில் குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தை மையமாகக் கொண்டு ஒரு அணியும், உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவை மையமாக கொண்டு மற்றொரு அணியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இதனால் அனைத்து அணியில் உள்ள வீரர்களும் கலைக்கப்பட்டு ஐபிஎல் ஏலம் நடைபெற உள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இதன் ஏலம் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளதாக தெரிகிறது. அதற்கு முன்னர் ஒவ்வொரு அணியும் தங்கள் அணியில் இருந்த 4 வீரர்களை தக்க வைத்துக்கொள்ள பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது.

அதில் 3 இந்திய வீரர்கள், ஒரு வெளிநாட்டு வீரர் என்றும் அல்லது 2 இந்திய வீரர்கள், 2 வெளிநாட்டு வீரர்கள் என்றும் தக்க வைத்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் வீரராக, கேப்டன் தோனியை தக்க வைக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இதனை அடுத்து வெளிநாட்டு வீரர்களில் பிராவோவை தக்க வைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தெரிவித்த சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன், ‘பிராவோ சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து மட்டுமே ஓய்வு பெற்றுள்ளார். அதனால் அடுத்த ஆண்டு நிச்சயம் ஐபிஎல் தொடரில் அவர் விளையாடுவார். ஆனால் சிஎஸ்கே அணிக்காக விளையாடுவாரா என்பதை என்னால் உறுதியாக கூற முடியாது. அவர் சிறந்த வீரர்தான். ஆனால் 4 வீரர்களை மட்டும்தான் தக்க முடியும். யார் யார் இடம்பெற போகின்றனர் என அடுத்த வாரத்துக்குள் உங்களுக்கே தெரிந்துவிடும்’ என சூசகமாக கூறியுள்ளார்.

வரும் நவம்பர் 30-ம் தேதிக்குள் ஒவ்வொரு அணியும், தாங்கள் தக்க வைக்க உள்ள வீரர்களின் பட்டியலை அளிக்க வேண்டும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

CSK, MSDHONI, IPL, BRAVO

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்