CSK vs PBKS: “எங்க டீமோட கீ ப்ளேயரா இருக்க போறாரு”.. ரசிகர்கள் விமர்சித்த வீரருக்கு சப்போர்ட் பண்ணிய கேப்டன் ஜடேஜா..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்தது குறித்து சிஎஸ்கே அணியின் கேப்டன் ஜடேஜா விளக்கம் கொடுத்துள்ளார்.

Advertising
>
Advertising

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி நேற்று மும்பை மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக லிவிங்ஸ்டன் 60 ரன்களும், ஷிகர் தவான் 35 ரன்களும் எடுத்தனர்.

இதனை அடுத்து பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி 18 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 126 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 54 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இப்போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலம் ஐபிஎல் தொடரின் முதல் 3 போட்டிகளில் சிஎஸ்கே அணி தோல்வியை சந்தித்துள்ளது. ஐபிஎல் வரலாற்றில் இப்படி ஹாட்ரிக் தோல்வியை சந்திப்பது இதுவே முதல் முறை.

இந்த நிலையில் போட்டி முடிந்த பின் தோல்வி குறித்து பேசிய சிஎஸ்கே அணியின் கேப்டன் ஜடேஜா, ‘இந்த போட்டியில் தோல்வி அடைந்தது மிகவும் வருத்தம் அளிக்கிறது. நாங்கள் பவர் பிளே ஓவர்களில் நிறைய விக்கட்டுகளை இழந்து விட்டோம். அதுமட்டுமல்லாமல் இந்த போட்டியில் முதல் பந்தில் இருந்தே எந்தவொரு இடத்திலும் எங்களுக்கு மொமண்டம் கிடைக்கவில்லை. பவுலிங்கில் சிறப்பாக செயல்பட்டு இருந்தாலும், பேட்டிங்கில் பெரிய அளவுக்கு சோபிக்கவில்லை.

சிவம் துபே பட்டும் சிறப்பாக விளையாடினார். அவர் பேட்டிங் செய்த விதம் மிகவும் அற்புதமாக இருந்தது. நிச்சயம் அவர் எங்கள் அணியின் கீ பிளேயராக இருப்பார். இனிவரும் போட்டிகளில் எங்களுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிக்கொண்டு வர முயற்சிப்போம். அதுமட்டுமல்லாமல் வலுவான அணியாக மீண்டும் திரும்பி வருவோம்’ என ஜடேஜா கூறியுள்ளார்.

இப்போட்டியில் சிவம் துபே 57 ரன்கள் அடித்து இருந்தார். முன்னதாக நடந்த லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் சிவம் துபே வீசிய 19-வது ஓவரில் 25 ரன்கள் சென்றன. அப்போட்டியில் சிஎஸ்கே அணி தோல்வி பெற அது முக்கிய காரணமாக அமைந்தது. அதனால் அவரை ரசிகர்கள் கடுமையாக விமர்சனம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்