‘யோவ் இந்த நேரத்துல கூட இப்படிதானா’.. இதனாலதான் எல்லாருக்கும் உன்மேல அம்புட்டு லவ்.. ‘தல’ தோனி செஞ்ச செயல்.. வைரலாகும் போட்டோ..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.

ஐபிஎல் (IPL) தொடரின் இறுதிப்போட்டி இன்று (15.10.2021) துபாய் மைதானத்தில் நடைபெற்றது. இதில் தோனி (Dhoni) தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியும், இயான் மோர்கன் (Eoin Morgan) தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் (KKR) அணியும் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி, 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 192 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக டு பிளசிஸ் 86 ரன்களும், மொயின் அலி 37 ரன்களும் எடுத்தனர். கொல்கத்தா அணியைப் பொறுத்தவரை சுனில் நரேன் 2 விக்கெட்டுகளும், சிவம் மாவி 1 விக்கெட்டும் எடுத்தனர்.

இதனை அடுத்து பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதனால் 27 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி அபார வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியுள்ளது. இதன்மூலம் 4-வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்று சிஎஸ்கே அணி அசத்தியுள்ளது. இது ரசிகர்களிடையே உற்சாகத்தை கொடுத்துள்ளது.

இந்த நிலையில், சிஎஸ்கே கேப்டன் தோனி செய்த செயல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. அதில், போட்டியின் முதல் இன்னிங்ஸில் பீல்டிங் செய்தபோது கொல்கத்தா அணியின் இளம் பேட்ஸ்மேன் ராகுல் திரிபாதிக்கு (Rahul Tripathi) காலில் காயம் ஏற்பட்டது. அதனால் போட்டியின் பாதியிலேயே அவர் வெளியேறினார்.

இதனால் வழக்கமாக 4-வது வீரராக களமிறங்கும் ராகுல் திரிபாதி, 7-வது ஆர்டரில் களமிறங்கினார். ஆனாலும் காயம் காரணமாக அவரால் விளையாட முடியவில்லை. ரன் எடுக்க ஓடும்போது கூட நொண்டிக் கொண்டேதான் சென்றார். இந்த சமயத்தில் ஷர்துல் தாகூர் வீசிய ஓவரில் மொயின் அலியிடம் கேட்ச் கொடுத்து ராகுல் திரிபாதி ஆட்டமிழந்தார்.

அப்போது வேகமாக வந்த சிஎஸ்கே கேப்டன் தோனி, ராகுல் திரிபாதியின் தோளில் தட்டி ஆறுதல் கூறினார். தோனியின் இந்த பண்பு கொல்கத்தா ரசிகர்களிடமும் வரவேற்பை பெற்றுள்ளது. பொதுவாக இளம் வீரர்களுக்கு இதுபோல் தோனி ஊக்கமளிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்