“நீங்க அந்த பழைய ஃபினிஷர் தோனி இல்ல”.. கண்டிப்பா ‘இதை’ பண்ணியே ஆகணும்.. முன்னாள் வீரர் முக்கிய அட்வைஸ்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசிஎஸ்கே அணியின் கேப்டன் தோனியின் பேட்டிங் ஆர்டர் குறித்து முன்னாள் வீரர் கருத்து தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் 13-வது சீசன் வரும் 26-ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது. இதன் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன. போட்டி நடைபெற இன்னும் சில நாட்களே உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த முறை ஐபிஎல் கோப்பையை கைப்பற்றிய சிஎஸ்கே அணி இந்த முறையும் கோப்பையை கைப்பற்ற முனைப்பு காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. டு பிளசிஸ், ஷர்துல் தாகூர், சுரேஷ் ரெய்னா ஆகிய வீரர்களைத் தவிர, சிஎஸ்கே அணியில் ஏற்கனவே விளையாடிய வீரர்களில் மீண்டும் இடம் பெற்றுள்ளனர்.
இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரிதீந்தர் சோதி, தோனியின் பேட்டிங் ஆர்டர் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், ‘நடப்பு ஐபிஎல் தொடரில் தோனி பேட்டிங்கில் டாப் ஆர்டரில் களமிறங்க வேண்டும். ஏனென்றால் சில வருடங்களுக்கு முன்பு எதிரணிகளை பந்தாடிய அதே பழைய ஃபினிஷர் தோனி தற்போது இல்லை. ஆனாலும் சிஎஸ்கே அணிக்கு தோனி ஒரு முக்கியமான வீரர். அதனால் 10, 11-வது ஓவர்களில் களமிறங்கி ஓரளவுக்கு செட்டிலாகி விட்டு அதன்பின் கடைசி நேரத்தில் ரன்களை அதிரடியாக அடிக்க முடியும்’ என ரிதீந்தர் சோதி கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், ‘ஜடேஜாவின் பார்ம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக சமீபத்தில் நடந்த முதல் மொஹாலி டெஸ்ட் போட்டியில் பேட்டிங் மற்றும் பவுலிங் செய்த விதம் அபாரமாக இருந்தது. இது சென்னை அணிக்கு மகிழ்ச்சியான செய்தி. அதேபோல ஐபிஎல் தொடரிலும் அவர் செயல்பட்டால் கண்டிப்பாக சிஎஸ்கே அணியை இறுதிப்போட்டி வரை அவரால் அழைத்துச் செல்ல முடியும். தோனி, ஜடேஜா போன்ற மிகப்பெரிய வீரர்கள் சென்னை அணிக்காக பொறுப்புடன் விளையாட வேண்டும்’ என ரிதீந்தர் சோதி கருத்து தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "திரும்ப வந்துட்டாருங்க அவரு.." ஐபிஎல் தொடரில் மீண்டும் வரும் ரெய்னா.. சென்னை மேட்ச் நடக்குறப்போ சும்மா களை கட்டப் போகுது..
- "கொஞ்ச நாள் முன்னாடி கோலி கிட்ட பேசுனேன்.. அப்போ அவர் சொன்ன ஒரு விஷயம்".. சீக்ரெட்டை உடைத்த இர்ஃபான்..!
- லக்னோ அணிக்காக இளம் வீரரை தட்டித்தூக்க தீவிரம் காட்டும் கம்பீர்.. கசிந்த தகவல்..!
- விசா விவகாரம்.. மொயின் அலி எப்போ இந்தியா வருவார்..? சிஎஸ்கே சிஇஓ விளக்கம்..!
- அவங்க இல்லான்னா என்ன.. 3 தரமான ப்ளேயர்ஸை குறைஞ்ச ரேட்டுக்கு எடுத்திருக்கோம்.. சிஎஸ்கே கோச் சொன்ன சூப்பர் தகவல்..!
- தோனிக்கு அப்புறம் சிஎஸ்கே கேப்டன் இவர்தான்.. மூத்த வீரரை கை காட்டும் ஆகாஷ் சோப்ரா.. வாய்ப்பு இருக்கா..?
- IPL 2022 : வாவ்… செம்ம ஹேண்ட்ஸம் லுக்கில் கிங் கோலி.. RCB வெளியிட்ட வைரல் Pic!
- தோனி பற்றிய கேள்வி.. "இப்டி கேக்குறதே முட்டாள்தனம் தான்'ங்க.." விமர்சித்த கம்பீர்.. ரசிகர்கள் வாய்க்கு போட்ட பூட்டு
- IPL 2022: எங்க டீம்ல 11 பேர் இல்ல 12 பேர்… செம்மயான அறிவிப்பை வெளியிட்ட RCB
- மோதிரம் மாற்றி முத்தம் கொடுத்து கொண்ட மேக்ஸ்வெல் ஜோடி! இணையத்தை கலக்கும் திருமண புகைப்படம்