'சிஎஸ்கே'க்கு அடுத்த ருத்துராஜ் ரெடி?!.. "அந்த தங்கத்த சீக்கிரம் தூக்கிட்டு வாங்கப்பா.." இனி இருக்கு 'சரவெடி'!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தாண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கைப்பற்றி அசத்தியிருந்த நிலையில், அடுத்த ஆண்டு, இரண்டு புதிய அணிகள் உட்பட மொத்தம் பத்து அணிகள், ஐபிஎல் போட்டியில் கலந்து கொள்ளவுள்ளது.

Advertising
>
Advertising

இதனால், ஐபிஎல் போட்டிகளுக்கு முன்பாக, மிக பிரம்மாண்ட அளவில் ஏலம் நடைபெறவுள்ள நிலையில், இதற்காக அனைத்து அணிகளும் தற்போதிலிருந்தே ஆயத்தமாகி வருகிறது. புதிதாக சேர்க்கப்பட்டுள்ள லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகளும் பயிற்சியாளர்கள் தொடங்கி, ஒவ்வொன்றாக நியமித்து வருகின்றது.

அது மட்டுமில்லாமல், ஐபிஎல் ஏலத்திற்கு முன்பாகவே சில வீரர்களை, இரு புதிய அணிகளும், தங்களது அணியில் தக்க வைத்துக் கொள்ளவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது. அதே போல, தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி, அஸ்வின், தவான் உட்பட சில  இளம் வீரர்களை ஏலத்தில் எடுக்க முனைப்பு காட்டுவதாகவும் கூறப்படுகிறது. அத்துடன், ருத்துராஜ் போன்ற இளம் வீரர் ஒருவரையும் அணியில் சேர்க்க, சென்னை அணி திட்டமிட்டுள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டு, சென்னை அணிக்காக ஐபிஎல் போட்டிகளில் ஆடத் தேர்வான ருத்துராஜ் கெய்க்வாட் (Ruturaj Gaikwad),  தொடக்க வீரராக மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்தாண்டு ஐபிஎல் தொடரில், 635 ரன்கள் குவித்த அவர், ஆரஞ்ச் கேப்பையும் தட்டிச் சென்றார். உள்ளூர் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம், ஐபிஎல் போட்டியில் அவருக்கு வாய்ப்புக் கிடைத்த நிலையில், தற்போது இந்திய அணியின் எதிர்கால நட்சத்திரமாகவும் மாறியுள்ளார்.

அப்படி ஒரு வீரர் தான், ஒடிசாவைச் சேர்ந்த 24 வயதான சுப்ரான்சு சேனாபதி (Subhranshu Senapati). ஒடிஷா அணிக்காக ஆடி வரும் இவர், தற்போது நடைபெற்று வரும் விஜய் ஹசாரே டிராபி தொடரில், 7 போட்டிகளில் 275 ரன்கள் எடுத்துள்ளார். இதே போன்று, சையது முஷ்டாக் அலி தொடரிலும் 5 போட்டிகளில் 138 ரன்கள் எடுத்து அசத்தியுள்ளார்.

இதனால், இளம் வீரர் சுப்ரான்சு சேனாபதியை அழைத்து, அவரது பேட்டிங்கை பரிசோதித்து பார்க்கவும் சென்னை அணி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அதே போல, ஷாருக்கான், வாஷிங்டன் சுந்தர் போன்ற இந்தியாவின் சிறந்த இளம் வீரர்களையும் அணியில் இணைக்க சிஎஸ்கே வியூகம் அமைப்பதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

RUTURAJ GAIKWAD, CSK, SUBHRANSHU SENAPATI, IPL 2022, ருத்துராஜ், சேனாபதி, சிஎஸ்கே

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்