"இந்த விஷயத்துல அவர அடிச்சுக்கவே முடியாது.. செம 'புத்திசாலி'ங்க அவரு.." 'தோனி'யின் 'சீக்ரெட்' பற்றி மனம் திறந்த 'சேவாக்'!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 14 ஆவது ஐபிஎல் சீசனில், இதுவரை மூன்று போட்டிகளில் ஆடியுள்ள நிலையில், இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
முதல் போட்டியில் தோல்வியுடன் சிஎஸ்கே அணி ஆரம்பித்ததால், கடந்த சீசனைப் போல, சொதப்புவார்கள் என்றே அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், அதன் பிறகு பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு எதிரான போட்டிகளில், பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் அதிக தாக்கத்தை சென்னை வீரர்கள் ஏற்படுத்தி, ரசிகர்களிடையே அதிக நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளனர்.
இதில், நேற்று ராஜஸ்தான் அணிக்கு எதிராக சென்னை அணி பெற்ற வெற்றிக்கு பலரும் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், சென்னை அணியின் வெற்றி குறித்து சில கருத்துக்களை இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் (Sehwag) தெரிவித்துள்ளார்.
'ஒரு பந்து வீச்சாளரைப் பொறுத்தவரையில், ஸ்விங் மற்றும் ஸ்பின் ஆகியவற்றை எப்படி, எப்போது பயன்படுத்த வேண்டும் என்பது பற்றி அறிந்திருக்க வேண்டும். சென்னை அணிக்கு எதிராக ஆடிய ராஜஸ்தான் அணி வீரர் பட்லர், 70 முதல் 80 ரன்களை அடித்திருந்தால், நிச்சயம் தனது அணிக்கு அவர் வெற்றியைத் தேடிக் கொடுத்திருப்பார். ஆனால், ஸ்பின் பந்து வீச்சுக்கு உதவியாக பிட்ச் இருந்தது தான் வித்தியாசத்தை உண்டு பண்ணியது.
இதனை அறிந்து கொண்டு, சிஎஸ்கே பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். அவர்கள் நல்ல பந்து வீச்சாளர்கள் என்பதால் மட்டும் இது நிகழவில்லை. அவர்களின் கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர் தோனியின் (Dhoni) வழிகாட்டுதலின் மூலம் தான் இது நிகழ்ந்தது. தோனி மிகவும் புத்திசாலி. தன்னுடைய பந்து வீச்சாளர்களுக்கு என்ன ஆலோசனை வழங்குவது, ஒரு பந்து வீச்சாளரிடம் இருந்து எப்படியான பந்து வீச்சு வெளிவர வேண்டும் என்பதை தோனி நன்கு அறிந்தவர்.
ஜடேஜா ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை எடுத்ததும், அடுத்த ஓவரிலேயே மொயின் அலியை பந்து வீசச் செய்தார் தோனி. ஏனென்றால், ஜடேஜாவை போலவே மொயின் அலி பந்து வீசுவார் என்பது தோனிக்கு தெரியும்.
தோனியின் கேப்டன்சியை பொறுத்தவரையில், அவர் அதிர்ஷ்டசாலி என கூறப்படுகிறது. ஆனால், அதிர்ஷ்டம் என்பதைத் தாண்டி, போட்டிக்கு நடுவே அவர் நிகழ்த்தும் மாற்றங்களுடன், அதிர்ஷ்டமும் அவருக்கு சாதகமாக அமைகிறது' என சிஎஸ்கே அணி மற்றும் தோனியை பாராட்டி, சேவாக் பேசியுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- அன்றே கணித்த ‘தல’!.. திடீரென வைரலாகும் ‘8 வருட’ பழைய ட்வீட்.. அப்படி என்ன சொல்லி இருந்தார் தோனி..?
- "என்னங்க இது??.. இப்டி பண்ணதுக்கு நியாயமா அவர 'அவுட்' பண்ணி இருக்கணும்.." கொந்தளித்த 'முன்னாள்' வீரர்கள்.. 'சர்ச்சை'யை கிளப்பிய 'பிராவோ'வின் செயல்!!
- '3 மேட்ச்லயும் செம்ம சொதப்பல்!.. எதுக்காக அவர ஓப்பனிங் இறக்குறீங்க'?.. கொதிக்கும் ரசிகர்கள்!.. ருத்துராஜ் குறித்து... மௌனம் கலைத்த சிஎஸ்கே!!
- 'நாங்க பழைய தோனிய எப்பதான் பார்க்குறது'?.. ரசிகர்கள் ஆதங்கம்!.. விடாப்பிடியாக இருக்கும் சிஎஸ்கே!.. இந்த சிக்கலுக்கு ஒரு முடிவே இல்லயா?
- "நான் சொல்றத அப்டியே பண்ணு.." இக்கட்டான நேரத்தில் ஜடேஜாவுக்கு 'தோனி' கொடுத்த 'ஐடியா'.. மைக்கில் பதிவான 'ஆடியோ'.. "அதுக்கப்புறம் நடந்ததே வேற!!"
- 'மொதல்லையே நான் ப்ளான் பண்ணிட்டேன்...' 'எப்படி மூணு விக்கெட் என்னால எடுக்க முடிஞ்சுதுன்னா...' - சீக்ரெட் உடைத்த மொயின் அலி...!
- 'அவசர அவசரமாக ஓடிவந்த டு பிளசிஸ்!.. சாம் கரனை அழைத்து... தனியாக பேச்சுவார்த்தை'!.. மேட்ச்சை புரட்டிப் போட்ட சம்பவம்!!
- VIDEO: ‘அது எப்படி பாஸ்’!.. ‘எந்த பக்கம் திரும்பினாலும் நீங்கதான் தெரியுறீங்க’!.. ஜடேஜா செஞ்ச ‘தரமான’ சம்பவம்..!
- 'மேட்ச்'க்கு நடுவே 'தோனி' செய்த காரியம்.. "ச்சே, இது மட்டும் அன்னைக்கே நடந்துருந்தா, நம்ம லெவலே வேற.." வருந்திய 'ரசிகர்கள்'!!
- ‘24 வயசுலயும் சரி இப்பவும் சரி, அதுக்கு மட்டும் உத்தரவாதம் கொடுக்கவே முடியாது’!.. வெளிப்படையாக பேசிய ‘தல’ தோனி..!