"இறங்கி அடி.. நான் இருக்கேன்".. தல தோனி கொடுத்த பூஸ்ட்.. ரஹானே நெகிழ்ச்சி..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுமும்பை அணிக்கு எதிரான போட்டியில் சென்னை வீரர் ரஹானே காட்டிய வானவேடிக்கை ரசிகர்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது ஐபிஎல் தொடர். கடந்த வருடத்திலிருந்து பத்து அணிகள் இந்த தொடரில் பங்கேற்று வருகின்றன. அதன்படி சில தினங்களுக்கு முன்னர் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் அட்டவணை வெளியிடப்பட்டது. மார்ச் 31ஆம் தேதி துவங்கிய ஐபிஎல் போட்டிகள் டிசம்பர் 28 ஆம் தேதி வரை இந்தியாவில் நடைபெற இருக்கின்றன. இந்தத் தொடரின் முதல் போட்டியில் சென்னை அணியை எதிர்த்து குஜராத் அணி விளையாடியது. இதில் குஜராத் வெற்றி பெற்றது.
இதையடுத்து சென்னையில் லக்னோவை எதிர்கொண்டது CSK. இந்த போட்டியில் சென்னை அணி வெற்றிபெற்றது. இந்த நிலையில் நேற்று வான்கடே மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேவரைட் ஆப்போஸிஷன் அணியான மும்பை அணியை எதிர்கொண்டு விளையாடியது. எல் கிளாசிக்கோ என அழைக்கப்படும் இந்த போட்டியில் மும்பை அணி முதலில் பேட்டிங் செய்தது. ஆரம்பம் அதிரடியாக இருந்தாலும் ஜடேஜா, சாண்ட்னரின் மந்திர சூழலில் மும்பை சிக்கி சின்னாபின்னமானது.
இதன் பலனாக அந்த அணி 20 ஒவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து சென்னை அணி சேஸிங்கில் இறங்கியது. கான்வே டக்கில் வெளியேறி அதிர்ச்சி அளித்தாலும் அடுத்துவந்த ரஹானே மும்பை பவுலர்களை அலறவிட்டார். 27 பந்துகளை சந்தித்த ரஹானே 61 ரன்களை குவித்தார். இதில் 7 பவுண்டரிகளும் 3சிக்ஸர்களும் அடக்கம். மற்றொருபுறம் ருதுராஜ் நிதானமாக ஆட, அவருடன் கரம்கோர்த்த ராயுடு அணியினை வெற்றிபெற செய்தார். 18.1 ஓவரில் சென்னை வெற்றி இலக்கை எட்டியது.
ஐபிஎல் தொடரில் நீண்ட காலமாக விளையாடி வந்தாலும் சமீப ஆண்டுகளில் பெஞ்சில் இருந்தவர் ரஹானே. அவரை பட்டை தீட்டிய வைரமாக மாற்றியிருக்கிறார்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் பிளெமிங்கும் தல தோனியும். நீண்ட நாட்களுக்கு பிறகு பேட்டிங் செய்ய வந்த ரஹானே தெறிக்கும் ஃபார்மில் இருப்பதை அழுத்தமாக நிரூபித்துவிட்டு சென்றிருக்கிறார்.
போட்டி முடிந்தவுடன் பேசிய அவர்,"இந்தப் போட்டியில் நான் விளையாட போகிறேன் என்று எனக்கு டாஸ் போடுவதற்கு முன்பு தான் தெரிய வந்தது. துரதிர்ஷ்டவசமாக மோயின் அலிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனால் பயிற்சியாளர் பிளமிங் டாஸ் போடுவதற்கு முன்பு இன்று நீ விளையாடுகிறாய் என்று கூறினார். ஐபிஎல்லுக்கு முன்பு, நான் நிறைய உள்ளூர் போட்டிகளில் விளையாடி ரன்களை சேர்த்தேன். இங்கு டெஸ்ட் விளையாடவேண்டும் என விருப்பப்படுகிறேன். பிளெமிங் மற்றும் தோனி பாய் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்தார்கள். ஐபிஎல் போன்ற தொடரில் எப்போது வாய்ப்பு கிடைக்கும் என தெரியாது. ஆனால் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்" என்றார்.
அதேபோல தோனி பேசுகையில் ரஹானே திறமையான பேட்ஸ்மேன் எனவும் அவரை என்ஜாய் செய்து பேட்டிங் செய்யும்படி கூறியதாகவும் தெரிவித்தார். மேலும் அப்போது பேசிய தோனி,"பேட்டிங் டெக்னிக் அவரிடத்தில் நன்றாக இருக்கிறது. பிரஷரை பொருட்படுத்தாமல் விளையாடுங்கள். சப்போர்ட் செய்ய நாங்கள் இருக்கிறோம் என கூறினோம். உண்மையிலேயே சிறப்பாக விளையாடினார்" என்றார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "41 வயசுல உலகத்தின் பெஸ்ட் பவுலரை Face பண்றது".. தோனி குறித்து வியந்து பேசிய ராபின் உத்தப்பா.!
- "தோனிக்கு எப்போதுமே டீம் தான் முக்கியம்.. அதுக்கு அப்புறம் தான் மத்தது எல்லாம்".. மனம் திறந்த சேவாக்..!
- CSK மேட்சை பார்க்க ஆசைப்பட்ட சிறுவர்கள்.. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்..!
- "சேப்பாக்கத்துல கால் வச்சாலே".. சின்ன தல ரெய்னாவின் உருக்கமான போஸ்ட்..!
- "இப்படி பந்து வீசுனா.. வேற கேப்டன் கூட விளையாடட்டும்".. தல தோனி கொடுத்த வார்னிங்.. வீடியோ..!
- 4 வருஷத்துக்கு அப்புறம் சென்னையில CSK மேட்ச்.. சேப்பாக்கத்தில் திரண்ட திரையுலக பிரபலங்கள்.. வைரல் புகைப்படங்கள்..!
- பயங்கரமான தோனி ரசிகரா இருப்பாரு போலயே.. ஆரத்தியெல்லாம் காட்டுறாரே.. யாரு சாமி நீ.. வீடியோ..!
- "எழுதி வச்சுக்கோங்க.. CSK க்கு அடுத்த கேப்டன் அவரு தான்".. ஆருடம் சொன்ன வீரேந்திர சேவாக்..!
- 2011 வேர்ல்ட் கப் Winning சிக்ஸரை அப்படியே ரீ கிரியேட் செஞ்ச தோனி.. தீயாய் பரவும் வீடியோ..!
- "பவுலரோட 2 விரலை தோனி உடைச்சுட்டாரு".. ராபின் உத்தப்பா உடைத்த சீக்ரட்..!