தமிழக வீரரின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்ற போராடிய சிஎஸ்கே.. ஆனா கடைசி வர ‘டஃப்’ கொடுத்து அந்த டீம் தட்டிட்டு போயிடுச்சு..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சிஎஸ்கே அணி எடுக்க முயற்சி செய்த தமிழக வீரரை கடைசியில் பெங்களூரு அணி தட்டிச் சென்றது.

Advertising
>
Advertising

ஐபிஎல் தொடரின் 15-வது சீசனுக்கான மெகா ஏலம் பெங்களூரில் நடைபெற்று வருகிறது. இதில் பிராவோ, அம்பட்டி ராயுடு, தீபக் சஹார் என ஏற்கனவே விளையாடிய வீரர்களை சிஎஸ்கே அணி ஏலத்தில் எடுத்துள்ளது. ஆனால் கடுமையாக நடந்த போட்டியில் டு பிளசிஸை சிஎஸ்கே அணி தவறவிட்டது. அவரை பெங்களூரு அணி ஏலத்தில் எடுத்தது.

இந்த நிலையில் தமிழகத்தைச் சேர்ந்தவரும் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனுமான தினேஷ் கார்த்திக் பெயர் ஏலத்தில் வந்தது. உடனே ஒவ்வொரு அணிகளும் ஏலம் கேட்க தொடங்கின. அப்போது சிஎஸ்கே அவரை ஏலத்தில் எடுக்க ஆர்வம் காட்டியது. அதேவேளையில் பெங்களூரு அணியும் தினேஷ் கார்த்திக்கை எடுக்க போட்டி போட்டது.

நீண்ட நேரமாக இரு அணிகளும் போட்டி போட்டு ஏலம் கேட்டன. எப்படியாவது தினேஷ் கார்த்திக்கை சிஎஸ்கே அணியில் எடுத்துவிட வேண்டும் என்ற நோக்கில் சிஎஸ்கே அணியும் முயற்சி செய்தது. ஆனால் பெங்களூரு அணியும் விட்டுக் கொடுப்பது போல் இல்லை. ஒரு கட்டத்தில் 5 கோடிக்கு மேல் ஏலம் செல்லச்செல்ல சிஎஸ்கே அணி சற்று யோசித்தது. இறுதியாக 5.50 கோடி ரூபாய்க்கு பெங்களூரு அணி தினேஷ் கார்த்தி ஏலத்தில் எடுத்தது.

முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாட நீண்ட ஆண்டுகளாக காத்துள்ளதாக தினேஷ் கார்த்திக் தனது விருப்பத்தை தெரிவித்திருந்தார். ஒவ்வொரு ஆண்டும் ஏலத்தின் போதும் தன்னை சிஎஸ்கே அணி எடுக்குமா என எதிர்பார்ப்பதாக அவர் கூறியிருந்தார். அதனால் இந்த ஆண்டு தினேஷ் கார்த்திக்கை எப்படியாவது எடுத்து விட வேண்டும் என சிஎஸ்கே அணி கடுமையாக முனைப்பு காட்டியது. ஆனால் கடைசியில் ஆர்சிபி அணி அவரை தட்டி சென்றது.

CSK, RCB, DINESHKARTHIK, IPL, IPLAUCTION

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்