இப்படி ஒரு ரூல்ஸ் இருக்குறதே நேத்துதான் நிறைய பேருக்கு தெரிஞ்சிருக்கும்.. ராயுடுவின் செயலால் CSK-க்கு ‘நோ பால்’ கொடுத்த அம்பயர்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

பெங்களூருக்கு எதிரான போட்டியில் அம்பட்டி ராயுடுவால் சிஎஸ்கே அணிக்கு அம்பயர் நோபால் கொடுத்தது போட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertising
>
Advertising

இந்த ஐபிஎல் சீசனோட ‘பெஸ்ட்’ கேட்ச் இதுதான்யா.. சூப்பர்மேன் போல் பறந்து பிடித்த CSK வீரர்.. புகழ்ந்து தள்ளிய கிரிக்கெட் ஜாம்பவான்..!

ஐபிஎல் தொடரின் 22-வது லீக் போட்டி நேற்று மும்பை மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டு பிளசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி, 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 216 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சிவம் துபே 95 ரன்களும், ராபின் உத்தப்பா 88 ரன்களும் எடுத்தனர்.

இதனை அடுத்து பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இதில் சென்னை அணியை பொறுத்தவரை மகேஷ் தீக்‌ஷனா 4 விக்கெட்டுகளும், ஜடேஜா 3 விக்கெட்டுகளும், பிராவோ மற்றும் முகேஷ் சௌத்ரி ஆகியோர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

இந்த நிலையில் இப்போட்டியில் அம்பட்டி ராயுடு செய்த தவறால் சிஎஸ்கே அணிக்கு அம்பயர் நோ பால் கொடுத்தார். அதில் பிராவோ வீசிய 14-வது ஓவரின் 4-வது பந்தை பெங்களூரு அணியின் தினேஷ் கார்த்திக் எதிர்கொண்டார். அப்போது திடீரென அதை அம்பியர் நோ பால் என அறிவித்தார். இது சிஎஸ்கே வீரர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஏனென்றால் பிராவோ பந்துவீசும் போது கிரீஸ் லைனை தாண்டி காலை வைக்கவில்லை. அப்படி இருந்தபோதும் அம்பயர் நோ பால் கொடுத்தது ஏன் என கேள்வி எழுந்தது.

உடனே விக்கெட் கீப்பர் தோனி அம்பயரிடம் சென்று கேள்வி எழுப்பினார். அதற்கு பேட்ஸ்மேனுக்கு பின்னால் ஸ்கொயர் லெக் சைடில் 3 ஃபில்டர்கள் நின்றனர். ஆனால் அங்கு 2 ஃபில்டர்கள் மட்டுமே நிற்க அனுமதிக்கப்படுவர் (There were three fielders behind square on the leg-side. Only two are allowed). ஆனால் அம்பட்டி ராயுடு தவறுதலாக உள்ளே வந்து நின்று விட்டார். இதை கவனித்த அம்பயர் நோ பால் என அறிவித்தார். இப்படி ஒரு விதி கிரிக்கெட்டில் உள்ளது என்பதை அப்போதுதான் ரசிகர்கள் பலருக்கும் தெரிய வந்தது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி கவனம் பெற்று வருகிறது.

 

“தோனி அந்த முடிவை சொன்னதும் ரெய்னா அழுதுட்டாரு”.. பல வருசத்துக்கு முன்னாடி நடந்த உருக்கமான சம்பவம்.. இளம் வீரர் சொன்ன சீக்ரெட்..!

 

CRICKET, IPL, CSK, AMBATI RAYUDU, ANGRY, UMPIRE, RCB, CSK VS RCB, IPL 2022

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்