சிஎஸ்கே ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. காயத்தில் இருந்து மீண்ட இளம் வீரர்.. எக்கச்சக்க எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சிஎஸ்கே அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் வலைப்பயிற்சியில் ஈடுபடும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

Advertising
>
Advertising

ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் முதல் போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் மோதின.

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் தோனி அரைசதம் (50 ரன்கள்) விளாசினார். இதனை ஆடுத்து பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 18.3 ஓவர்களில் முடிவில் 133 ரன்கள் எடுத்தது 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து வரும் 31-ம் தேதி லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியுடன் சிஎஸ்கே அணி மோதவுள்ளது.

இந்த நிலையில், சிஎஸ்கே அணியின் இளம் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் தீபக் சஹார் பயிற்சி செய்யும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. முன்னதாக நடந்த இலங்கை அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரின் போது அவருக்கு காயம் ஏற்பட்டது. அதனால் அந்த தொடரில் இருந்து பாதியிலேயே தீபக் சஹார்ர் வெளியேறினார்.

தொடர் ஓய்வில் இருந்து வந்த தீபக் சஹார், ஐபிஎல் தொடரில் பங்கேற்பாரா என ரசிகர்கள் மத்தியில் சந்தேகம் எழுந்து வந்தது. நேற்று நடந்த கொல்கத்தா அணிக்கு எதிரான முதல் போட்டியிலும் தீபக் சஹார் விளையாடவில்லை. இந்த சூழலில் அவர் காயத்திலிருந்து மீண்டு பயிற்சி செய்யும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. அதனால் அடுத்து நடைபெற உள்ள ஐபிஎல் லீக் போட்டிகளில் தீபக் சஹார் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

CSK, IPL, DEEPAK CHAHAR

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்