‘காட்டுக்குள் ஹோட்டல்’!.. தென் ஆப்பிரிக்காவில் இந்திய வீரர்கள் தங்கப்போற இடம் இதுதானா..? அப்படி என்ன ஸ்பெஷல்..?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய அணிக்காக தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் ஏற்பாடு செய்துள்ள ஹோட்டல் கவனம் பெற்று வருகிறது.

Advertising
>
Advertising

இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதற்காக வரும் 16-ம் தேதி இந்திய வீரர்கள் தென் ஆபிரிக்காவுக்கு செல்ல உள்ளனர்.

ஆனால் தற்போது தென் ஆப்பிரிக்காவில் ஓமிக்ரான் வகை கொரானா வைரஸ் பரவி வருகிறது. இதனால் வீரர்களின் பாதுகாப்பு குறித்து விமர்சனம் எழுந்து வருகிறது. இதன் காரணமாக இந்த தொடர் ரத்து செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக முதலில் கூறப்பட்டது. ஆனால் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி இந்த தொடர் ரத்து செய்ய வாய்ப்பில்லை என கூறினார்.

இந்த நிலையில் இந்திய அணிக்காக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி இந்திய வீரர்கள் தங்குவதற்காக ஐரீன் கண்ட்ரீ லாட்ஜ் என்ற ஹோட்டல் புக் செய்யப்பட்டுள்ளது. இந்த ஹோட்டல் காடுகளுக்கு நடுவில் அமைந்துள்ளது. அதனால் வெளியாட்கள் யாரும் அவ்வளவு சீக்கிரமாக ஹோட்டலுக்கு அனுமதி இல்லாமல் நுழைந்து விட முடியாது. இந்த ஹோட்டலில் தான் இந்திய வீரர்கள் அனைவரும் பயோ பபுளில் தங்க வைக்கப்பட உள்ளனர்.

ஓமிக்ரான் வைரஸ் பரவி வருவதால் வெளியில் இருந்து விருந்தினர்கள் யாரும் இந்த ஹோட்டலுக்கு வர அனுமதி வழங்கப்படவில்லை. ஹோட்டல் ஊழியர்களும் குவாரண்டைனில் இருந்த பின்னரே அங்கு பணியாற்ற அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் தினந்தோறும் ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் ஹோட்டலின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி கவனம் பெற்று வருகிறது.

CRICKET, INDVSA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்