போராடி தோற்ற பிரேசில்.. நெதர்லாந்துக்கு செக் வைத்த அர்ஜென்டினா.. காலிறுதி போட்டிகள் முடிவில் முன்னேறிய அணிகள் யார்?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுFIFA உலக கோப்பை தொடரில் இரண்டு காலிறுதி போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், சில அதிர்ச்சி முடிவுகளும் அரங்கேறி உள்ளது.
கத்தாரில் வைத்து விறுவிறுப்பாக நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து தொடர், தற்போது ஏறக்குறைய இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.
இதில் நடந்த முதல் காலிறுதி போட்டியில் பிரேசில் மற்றும் குரோஷியா அணிகள் மோதி இருந்தது. இந்த முறை உலக கோப்பைத் தொடரை வெல்லும் அணிகளில் ஒன்றாக பிரேசிலும் பார்க்கப்பட்டிருந்தது.
அப்படி ஒரு சூழலில் நடந்த காலிறுதி போட்டியில் தொடக்கம் முதலே விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்தது. இரு அணிகளும் சிறப்பாக விளையாடியதால் முதல் 90 நிமிடங்களில் யாரும் கோல் அடிக்கவில்லை. இதன் காரணமாக 30 நிமிடங்கள் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது.
இதில் பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மர் கோல் ஒன்றை அடித்து முன்னிலை ஏற்படுத்தினார். குரோஷியா அணியும் கடைசி நிமிடங்களில் பதிலடி கோல் கொடுத்தது. கூடுதல் நேரத்தில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்ததால் வெற்றியாளர் யார் என்பதை தீர்மானிக்கும் பெனால்டி ஷூட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் 4 - 2 என்ற கணக்கில் குரோஷியா வெற்றி பெற பிரேசில் அணி வீரர்கள் மற்றும் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனால், நெய்மர் உள்ளிட்ட பிரேசில் வீரர்கள் மைதானத்திலேயே கண்ணீர் விட, குரோஷியா வீரர்கள் அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்திருந்தனர். 1986 ஆம் ஆண்டு உலக கோப்பைத் தொடருக்குப்பின் எந்த உலகக் கோப்பை நாக் அவுட் போட்டியிலும் பெனால்ட்டி ஷூட் வாய்ப்பில் குரோஷியா தோல்வி அடைந்ததில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது காலிறுதி போட்டியில், அர்ஜென்டினா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதி இருந்தது. இந்த போட்டியும் பெனால்டி ஷூட் வரைக்கும் சென்றிருந்தது. முன்னதாக இரு அணிகளும் இரு கோல்கள் அடித்திருந்த நிலையில், பெனால்டி ஷூட் வாய்ப்பு வரை போனது. இதன் இறுதியில், 4 - 3 என்ற கணக்கில் வெற்றி பெற்ற அர்ஜென்டினா அணி அரையிறுதி போட்டிக்கும் முன்னேறி இருந்தது.
மேலும் அரையிறுதி போட்டியில், அர்ஜென்டினா மற்றும் குரோஷியா அணிகள் மோத உள்ளது. அடுத்து நடைபெறும் காலிறுதி போட்டிகளில், போர்ச்சுகல் மற்றும் மொரோக்கா ஆகிய அணிகளும், இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய அணிகளும் மோத உள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "எனக்கு நம்பிக்கை இருக்கு".. கால்பந்து ஜாம்பவான் பீலே மருத்துவமனையில் அனுமதி.. ரசிகர்களுக்கு அவர் எழுதிய உருக்கமான பதிவு..!
- FIFA World Cup 2022 : அர்ஜென்டினா தோற்றதால் கண்ணீர் விட்ட கேரள சிறுவன்.. வீடு தேடி வந்த அசத்தல் ஜாக்பாட்!!
- இந்திய கொடியை அணிந்து கொண்டு.. கால்பந்து போட்டி பாக்க வந்த அர்ஜென்டினா பெண்.. காரணம் தெரிஞ்சு கொண்டாடும் இந்தியர்கள்!!
- பிகில் விஜய் ஸ்டைலில் பயிற்சியாளர் செய்த காரியம்.. "அர்ஜென்டினாவ சவூதி அரேபியா தோக்கடிச்சது இப்படி தான்".. வைரலாகும் வீடியோ!!
- கூட்டத்துல தந்தையை தொலைத்த மகன்.. கண்ணீர்விட்ட சிறுவனுக்காக ஒன்று திரண்ட மக்கள்.. வாவ் சொல்லவைக்கும் வீடியோ..!
- கனவுல கூட இந்த தீவுக்கு போய்டவே கூடாது.. மனுஷங்களே கிடையாது.. கால் வைக்குற இடமெல்லாம் பாம்புதானாம்..!
- இறக்கை மட்டுமே 30 அடி.. "உலகத்தின் முதல் பறவை அதுதானா?".. ஆய்வாளர்கள் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை..!
- யம்மாடி..உலகத்தின் மிக உயரமான மரம்.. பழம் பறிக்கனும்னா ராக்கெட்ல தான் போகணும்..! எங்க இருக்கு?
- ராணுவ வீரர்களுக்கு 35,000 "பவர்புல் மாத்திரைகளை" வாங்கிய பிரேசில்? விட்டு விளாசும் எதிர்க்கட்சிகள்..!
- ஒரே நேரத்துல 9 மனைவிகளுடன் வசித்த ரெமோ.. திடீர்னு அந்நியனா மாறிய ஒரு மனைவி..