'தல ரொனால்டோ செய்த சாதாரண 'மூவ்’... 'இப்படி மொத்தமா சோலிய முடிச்சிட்டாரு'... குளிர்பான நிறுவனத்துக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கிறிஸ்டியானோ ரொனால்டோ செய்த சாதாரண செயல் அந்த குளிர்பான நிறுவனத்தையே ஆட்டம் காண வைத்துள்ளது.

யூரோ 2020 கால்பந்து தொடர் ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு நாடுகள் பங்கேற்றுள்ளன. இந்நிலையில், யூரோ கால்பந்து தொடரின் போர்ச்சுகல் போட்டியின் முதல் ஆட்டத்திற்கு முன்னதாக பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இந்த செய்தியாளர் சந்திப்பில் போர்ச்சுகல் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ பங்கேற்றார்.

பத்திரிக்கையாளர் சந்திப்பிற்கு வந்த உடன் தனக்கான இருக்கையில் அமர்ந்த ரொனால்டோ தனக்கு முன்னால் மேஜையில் வைக்கப்பட்டிருந்த இரண்டு கோகோ கோலா குளிர்பான பாட்டில்களைப் பார்த்தார். உடனடியாக அந்த இரண்டு கோகோ கோலா பாட்டில்களையும் எடுத்த ரோனால்டோ அதை மேஜையை விட்டு அகற்றி கீழே வைத்தார். அதோடு நிற்காமல், தனக்கு அருகிலிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து ’தண்ணீர் குடியுங்கள்’ என்று கூறினார்.

இது உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இந்த சம்பவம் செய்தி நிறுவனங்கள் முதல் சமூகவலைத்தளங்கள் வரை பேசு பொருளாக மாறியது. கோகோ கோலாவை குடிக்காமல் தண்ணீரைக் குடியுங்கள் என ரோனால்டோ சொன்ன அந்த வார்த்தைகள் கோகோ கோலா நிறுவனத்தின் சந்தை மதிப்பையே ஆட்டம் காண வைத்துள்ளது.

ரொனால்டோவின் ஒற்றை வார்த்தையால் கோகோ கோலா நிறுவனம் சுமார் 4 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிற்கு அதாவது, இந்திய மதிப்பில் சுமார் 29 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு இழப்பைச் சந்தித்துள்ளது. ஐரோப்பியக் கால்பந்தாட்ட தொடருக்கான ஸ்பான்சர்களுள் ஒன்றான கோகோ கோலா, கிறிஸ்டியனோ ரோனால்டோவின் செயலுக்காக இதுவரை சட்ட ரீதியான நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபலங்களின் ஒரு சிறிய அசைவும் சர்வதேச அளவில் எந்த அளவிற்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதற்கு உதாரணமாக மாறியுள்ளது இந்த சம்பவம்.

மற்ற செய்திகள்